386. | வென்றைந்தும் காமாதி வேரறுத்து, மெல்லவே ஒன்ற நினைதிரேல், ஒன்றலாம்; - சென்றங்கை மானுடையான், என்னை உடையான் வடகயிலை தானுடையான் தன்னுடைய தாள். | | 87 |
387. | தாளொன்றால் பாதாளம் ஊடுருவத், தண்விசும்பில், தாளொன்றால் அண்டம் கடந்துருவித் - தோளொன்றால், திக்கனைத்தும் போர்க்கும் திறற்காளி காளத்தி நக்கனைத்தான் கண்ட நடம். | | 88 |
"பணிந்து எத்தனையும் சேய்த்தாக அகலப் போமின்கள்' என்க. "நமனும்" என்னும் உம்மை, உயர்வு சிறப்பு. தொழுதல், பத்தரைத் திசைநோக்கியாம். எத்தனையும் சேய்த்து ஆக - நீவிர் செல்லுமிடம் எவ்வளவு தொலைவாக முடியுமோ அவ்வளவு தொலைவு ஆகும்படி. 'சிவனடியரை நமன் தூதுவர் அணுகார்' என்பது கருத்து. 386. குறிப்புரை: 'ஐந்தும் வென்று' என்க. ஐந்து, ஐம்புலன், காமாதி - காமம் முதலிய அறு பகைகள். அவை காமம், குரோதம், உலோபம், மோகம், மதம். மாற்சரியம் - என்பன. இவை அவா, வெகுளி, இவறன்மை, மயக்கம், செருக்கு, அழுக்காறு என்பனவாம், 'இவைகளை வேரறுத்து' என்க. ஒன்ற - பொருந்த. 'தாளில் ஒன்ற' எனவும் 'சென்று ஒன்றலாம்' எனவும் இயையும், "தான்" எழுவாய் வேற்றுமை. "உடையான்" என்னும் குறிப்பு வினைப் பயனிலையைக் கொண்டது. 387. குறிப்புரை: "திறல் காளி" என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க, "கண்ட" என்பது, 'உண்டாக்கிய' என்னும் பொருட்டாய், 'செய்வித்த' எனப் பொருள் தந்து, "நக்கனை" என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று. செய்வித்தமையாவது, செய்ததற்கு ஏதுவாய் நின்றமை, 'தாருகன்' என்னும் அசுரனை அழித்த காளி, அதனால் செருக்கி உலகத்திற்கு ஊறு உண்டாக்கச் சிவபெருமான் அவளோடு நடனப் போர் செய்து, அவள் நாணிச் செருக்கொழியப் பண்ணினான் என்பது புராணம். "தாருகன் - பேருரங் கிழித்த பெண்ணும் அல்லள்"1 என இளங்கோவடிகளும் கூறினார். அப்பர் தமது தச புராணத் திருப்பதிகத்து நான்காவது திருப்பாடலில் இவ்வரலாற்றைக் குறித்தருளினார். 'இந்நடனம் ஊர்த்துவ தாண்டவம்' என்பதை, "தண் விசும்பில் - தாள் ஒன்றால் அண்டம் கடந்துருவி' எனக் குறித்தருளினார். அஃதாவது ஒருகாலை ஆகாயம் நோக்கிச் செல்ல உயரத் தூக்கி ஆடிய நடனம். "இந்நடனம்
1. சிலப்பதிகாரம் - மதுரைக் காண்டம் - வழக்குரை காதை.
|