423. | கங்குல் இரைதேருங் காகோ தரங்கேழற் கொம்பி னிடைக்கிடந்த கூர்மணியைப் - பொங்கும் உருமென்று புற்றடையும் ஈங்கோயே, காமன் வெருவொன்றக் கண்சிவந்தான் வெற்பு. | | 24 |
424. | கலவிக் களிறசைந்த காற்றெங்குங் காணா(து) இலைகைக்கொண் டேந்திக்கால் வீச - உலவிச்சென்(று) ஒண்பிடிகாற் றேற்றுகக்கும் ஈங்கோயே, பாங்காய வெண்பொடிநீற் றான்மருவும் வெற்பு. | | 25 |
425. | கன்னிப் பிடிமுதுகிற் கப்புருவம் உட்பருகி அன்னைக் குடிவர லாறஞ்சியே - பின்னரே |
மரம். அஃது ஆகுபெயராய், அதன் தழையைக் குறித்தது. இறுத்தல் - ஒடித்தல் "கை நீட்டும்" என்றது, 'கையை நீட்டிக் கொடுக்கும்' என்றபடி. செறுத்த - கொல்லப்பட்ட. கடம் - மதநீர். அஃது ஆகுபெயராய், யானை யைக் குறித்தது. தடத்த - பெரிய. உரிவை - தோல். 'யானைத் தோலாகிய தோல்' என இருபெயர் ஒட்டாகக் கூறினார். 423. குறிப்புரை: கங்குல் - இரவு. காகோதரம் - பாம்பு. கேழல் - காட்டுப் பன்றி. கொம்பின் இடைக் கிடந்த மணி - நிலத்தைக் கிளறும் பொழுது அக்கொம்பினிடையே வெளிப் பட்ட மாணிக்கம். கூர் - ஒளி மிகுந்த. உரும் - மேகத்தின் இடி. அஃது ஆகுபெயராய் அதனோடு உடன் தோன்றும் மின்னலைக் குறித்தது. 'மின்னலுக்குப்பின் இடி விழும்' என்னும் அச்சத்தால் பாம்பு புற்றை அடைவதாயிற்று. மின்னல் 'திடீர்' எனத் தோன்றுதல் போலப் பன்றி உழுதமை யால் அதன் கொம்புகளினிடையே மாணிக்கம் தோன்றிற்று. 'அதனைப் பாம்பு - மின்னல் - என மருண்டது' என்றது திரிபதிசய அணி காமன் - மன்மதன். வெருவு ஒன்ற - அச்சத் தைப் பொருத்த. "கண் சிவந்தான்" என்றது, இலக்கணையால், 'சினந்தான்' எனப் பொருள் தந்தது. அதுவும், 'எரித்தான்' எனத் தன் காரியம் தோற்றிநின்றது. "கொம்பின்" என்றது இன எதுகை. 424. குறிப்புரை: அசைந்த - இளைத்த. அசைந்த காற்று - முன்பெல்லாம் கலவிக்குப் பின் அவ் இளைப்புத் தீர ஏற்ற காற்று. காணாது - அப்பொழுது காணாமையால். இலை, பலகையான இலைகள். கால் வீச - காற்றை வீச. 'களிறு காற்றை வீசப் பிடி தன் இளைப்பு நீங்கும்படி அதனை உலவிச் சென்று ஏற்கும் ஈங்கோய்' என்க. வெண்பொடி. நீறு - இருபெயரொட்டு. 425. குறிப்புரை: கன்னிப் பிடி - களிற்றியானையோடு சேர்தல் இல்லாத பிடி யானை. 'முதுகில் கப்பு உருவம்' என்றது இடக்கர்
|