நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்த 18. திருக்கண்ணப்ப தேவர் திருமறம் அகவற்பா திருச்சிற்றம்பலம் 498. | திருக்கண் ணப்பன் செய்தவத் திறத்து விருப்புடைத் தம்ம விரிகடல் உலகே, பிறந்தது தேன்அழித் தூனூண் கானவர் குலத்தே, திரிவது பொருபுலி குறுமும் பொருப்பிடைக் காடே, வளர்ப்பது | 5. | செங்கண் நாயொடு தீவகம் பலவே, பயில்வது வெந்திறற் சிலையொடு வேல்வாள் முதலிய அந்தமில் படைக்கலம் அவையே, உறைவது குரைதசை பயின்று குடம்பல நிரைத்துக் கறைமலி படைக்கலங் கலந்த புல்லொடு | 10. | பீலி மேய்ந்தவை பிரிந்த வெள்ளிடை, |
498. மறம் - வீரம். இது மறக்குடியில் பிறந்தவர்கட்கு இயல்பாக உளதாகும். ஆயினும் அந்த மறம் பெரும் பான்மையும் பொருளாகிய அரசுரிமை பற்றியும், சிறுபான்மை அறம் பற்றியும் பலரிடம் நிகழ்ந்தமை, நிகழ்கின்றமை கண்கூடு. ஆயினும் மறக்குடியில் பிறந்த கண்ணப்ப தேவர் மேற்காட்டிய அனைத்தினும் மேலான பத்தித்துறையில் இணையில்லாத மறம் உடையராய் இருந்தமையைச் சிறத்தலால் இப்பாடல் ‘திருக்கண்ணப்ப தேவர் திருமறம்’ - எனப்பட்டது. அடுத்து வரும் கல்லாட தேவ நாயனார் அருளிச்செய்த திருமறத்திற்கும் இது பொருந்தும். அடி - 1, 2 : ‘திறந்து உலகே விருப்புடைத்து’ என இயைக்க உலகு - உயிர்த் தொகை. ‘சில பகுதிகள் மட்டும் அல்ல, முழுதும் என்பது விளக்கலின் ஏகாரம், தேற்றப் பொருட்டாய் தவத் திறத்தது பெருமையை விளக்கி நின்றது. அம்ம, வியப்பிடைச் சொல். அடி - 2, 3, 4 : ‘பிறந்தது’ என்பது அத்தொழில் மேலும், “திரிவது” என்பது அதற்குரிய இடத்தின்மேலும் நின்றன. பொருப்பு - மலை. ‘பொருப்புக்களை இடையிலே உடைய காடு’ என்க. அடி - 4, 5, 6, 7 : “வளர்ப்பது, பயில்வது” என்னும் ஒருமைகள் அவ்வத்தொழில்மேல் நின்றன. எனவே, நாய் முதலாகக் கூறியன
|