பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை410

துந்துபி கறங்கின தொல்சீர் முனிவரும்
ஏத்தினர் இன்னிசை வல்லே
சிவகதி பெற்றனன் திருக்கண் ணப்பனே.

தனி வெண்பா

தத்தையாம் தாய்தந்தை நாகனாம் தன்பிறப்புப்
பொத்தப்பி நாட்டுடுப்பூர் வேடுவனாம் - தித்திக்கும்
திண்ணப்ப னாஞ்சிறுபேர் செய்தவத்தாற் காளத்திக்
கண்ணப்ப னாய்நின்றான் காண்.

திருச்சிற்றம்பலம்


எல்லாரினும் தலையாயவன். “தோன்றல்” என்றதும் விளி. இறுதியிலும், “திருக்கண்ணப்பனே” என்றது, தொடக்கத்திற் குறித்த அப்பெயரை அதற்குரிய காரணத்தை விளக்கிக் கூறி முடித்தவாறு.

தனி வெண்பா, பெரிய புராணத்தை ஓதி உணர்ந்த பிற்காலத்தவரால் செய்து சேர்க்கப்பட்டது.

நக்கீரதேவ நாயனார் அருளிய
திருக்கண்ணப்ப தேவர் திருமறம் முற்றிற்று.