கபிலதேவ நாயனார் அருளிச் செய்த 20. மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை வெண்பா திருச்சிற்றம்பலம் 500. | திருவாக்கும்; செய்கருமம் கைகூட்டும்;செஞ்சொல் பெருவாக்கும், பீடும்பெருக்கும்; - உருவாக்கும்; ஆதலால், வானோரும் ஆனை முகத்தானைக் காதலால் கூப்புவர்தம் கை. | | 1 |
500. இரட்டைமணி மாலை பற்றிக்காரைக்கால் அம்மையார் பிரபந்த உரையுள்கூறப்பட்டது. குறிப்புரை: மூத்த நாயனார் - மூத்தபிள்ளையார் (ஆனை முகத்தான்). திரு ஆக்கும்;செஞ்சொற் பெரு வாக்கும், பீடும் பெருக்கும்; உருஆக்கும்; ஆதலால் அவனைக் காதலால், வானோரும் தம்கை கூப்புவர் - எனக் கூட்டுக. திரு - செல்வம். செய் கருமம் -செய்யத் தொடங்கும் செயல், கை -கூட்டும் -இடையூறின்றி இனிது முடியச் செய்வான். செஞ்சொல்பெரு வாக்கு - குற்றமற்ற சொற்களை வழங்கும்உயர்ந்த சொல்வன்மை. பீடு - பெருமை; புகழ். உரு -அழகு. "வானோரும்" என்னும் உம்மை உயர்வுசிறப்பு. அதனால் ஏனையோர் கைகூப்புதல் தானேஅமைந்தது. "கை கூப்புவர்" என்பது"தொழுவார்" என்னும் பொருளது ஆதலின், அஃது 'ஆனை முகத்தானை' என்னும் இரண்டாவதற்குமுடிபாயிற்று. 'செய் கருமம் கை கூட்டும்; ஆதலால்கைகூப்புவர்' என்று, 'பிள்ளையாரைத் தொழாதபொழுதுசெய் கருமம் கை கூடுதல் அரிது' என்னும் குறிப்பினது. இத்திருப்பாடலையே பற்றிப்பிற்காலத்தில் ஒளவையார், வாக்குண்டாம்: நல்லமனம் உண்டாம்; மாமலராள் நோக்குண்டாம்; மேனி நுடங்காது -பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு1
1. மூதுரை - காப்பு.
|