596. | 'இறையாய வெண்சங் கிவைதருவேன்' என்னும் 'இறைஆகம் இன்றருளாய்' என்னும்; - 'இறையாய்! மறைக்காட்டாய்! மாதவனே! நின்னுருவம் இங்கே மறைக்காட்டாய் என்னும்இம் மாது. | | 40 |
597. | மாதரங்கம் தன்ன ங்கஞ் சேர்த்தி, வளர்சடைமேல் மாதரங்கக் கங்கைநீர் மன்னுவித்து, - மாதரங்கத் தேரானை யூரான் சிவற்காளாஞ் சிந்தனையே தேரானை யூரானைத் தேர். | | 41 |
598. | தெருளிலார் என்னாவார்! காவிரிவந் தேறும் அருகில் சிராமலையெங் கோமான். - விரியுலகில் செல்லுமதில் மூன்றெரித்தான் சேவடியே யாம்பரவின் செல்லுமெழில் நெஞ்சே, தெளி. | | 42 |
596.குறிப்புரை: "இம்மாது" என்பதை, தனிச் சீரில் உள்ள"இறையாய்" என்பதற்கு முன்னர்க் கூட்டிப்பின்பு அது முதலாக, "மாதவனே" என்பது ஈறாகஉள்ளவற்றை முதலில் வைத்து உரைக்க. "இறை" -இரண்டில் முன்னது கை; பின்னது சிறிது. ஆகம் - மார்பு.'இறையான்' என்பது விளி யேற்று, "இறையாய்" எனவந்தது மறைக்காடு தலம். மாதவன் - பெண்ணைஉடம்பிலே உடையவன். இங்கே மறைக் காட்டாய் -இவ்விடத்தில் மறைவான ஓர் இடத்தில் காட்டு,"என்னும்" என்பதைப் பல முறை கூறியது. 'இவ்வாறுஇவள் பிதற்றுகின்றாள்' என்றற்கு. இதுவும்காதற்பட்டாள் ஒருத்தி கூற்று. 597. மாதர் அங்கம் - உமாதேவியதுஉடம்பு. மா தரங்கம் - பெரிய அலைகளையுடைய. மாதுஅரங்கத் தேர் ஆனை .ஊரான். அழகிய பொதுஇடங்களில் ஊர்தியாக யானையை ஊராதவன்,(இடபத்தையே ஊர்பவன்) என்றபடி. 'தேராக என ஆக்கம் வருவிக்க. ஈற்றடியில் உள்ள "தேர்" இரண்டில்முன்னது, 'தெளி' என்னும் பொருட்டு. 'சிவனுக்கு ஆளாக எண்ணுகின்ற எண்ணமே நல்லெண்ணம்' எனத்தெளிவாயாக - என்றபடி. பின்னது, (தெளிந்த வண்ணமே) 'சிந்தனை செய்' என்பதாம். இரண்டும் ஏவல்வினைமுற்றுக்கள். ஈற்றடியில் உள்ள "ஆனைஊரான்" என்றது, 'திருவானைக்கா' என்னும்தலத்தில் இருப்பவன் என்றதாம். 598.குறிப்புரை: ('தேர்' என்பதுகுறுக்கம் பெறின் 'தெரு' எனவரும் ஆகலின்"தெருள்" என்பது அந்தாதியாயிற்று.) அருகு -அண்மையிடம். விரி உலகம் செல்லும் மதில் -விரிந்த உலகம் எங்கும் செல்லக் கூடிய மதில்கள். ஈற்றடியில் "செல்லும்" என்றது. 'நமது ஒழுக்கம் பெரியோர்களது அவையில் ஏற்கப்படும்' என்றதாம்."எழில் நெஞ்சே" என்பதை முதலிற் கொள்க.
|