637. | பேரானை ஈருரிவை போர்த்தனை, ஆயிரத்தெண் பேரானை, ஈருருவம் பெற்றானைப் - பேராநஞ்(சு) உண்டானை உத்தமனை உள்காதார்க் கெஞ்ஞான்றும் உண்டாம்நா ளல்ல உயிர். | | 81 |
638. | உயிராய மூன்றொடுக்கி ஐந்தடக்கி, உள்ளத் துயிராய ஒண்மலர்தாள் ஊடே - உயிரான் பகர்மனத்தான், பாசுபதன் பாதம் பணியப் பகர்மனமே, ஆசைக்கட் பட்டு. | | 82 |
சொல்லால் அஃறிணையாதலின், அஃது இங்குப்பன்மையதாயிற்று, கோப் பாடிக் கோகரணம் -தலைவனது (சிவனது) இடமாகிய, பின்னைக்காய்க்கோப்பு ஆடி நின்றாற்கு - நப்பின்னைக்கு அன்பனாய்ஆயர்மகளி ரோடு கைகோத்துக் குரவையாடி நின்றமாயோனுக்கு. இடம் கொடுக்கும் - இடப் பாகத்தைக்கொடுத்த, எம்பெருமான் பேர் பின்னைக்கு ஆம்.எமக்குப் பெருமானாகிய சிவனது நாமத்தைச்சொன்னால் அது, வருகின்ற பிறப்பிற்கு உறுதுணையாய்வந்து உதவும். 637.குறிப்புரை: பேரானை ஈர்உரிவை - பெரிய யானையை உரித்த தோல்."ஆயிரத்தெண் பேர்" என்பதை வடமொழியில்,'அட்டோத்தர சகத்திர நாமம்' என்பர். ஈர் உருவம்- பெண்ணும், ஆணும் ஆய இருதிற உருவம். பேரா நஞ்சு -பிறரால் விலக்கலாகாத நஞ்சு. எஞ்ஞான்றும் - எந்தஒரு நாளும் 'உயிர் உண்டாம் நாள் அல்ல' (இறந்தநாளேயாம்) என்க. 'ஞான்று' என்பது இங்குப் பெயர்த்தன்மைப் பட்டு, எழுவாயாய் நின்றது."பெரும்பற்றப் புலியூரானைப் - பேசாதநாளெல்லாம் பிறவா நாளே"1 என்ற அப்பர்திருமொழியையும் நோக்குக. 638.குறிப்புரை: "உயிர்"மூன்றனுள் முதலது உயிர்ப்பு; மூச்சு - மூன்று மூச்சாவனஇடநாடி மூச்சு, வலநாடி மூச்சு, நடுநாடு மூச்சு. ஒடுக்கி -அடக்கி; கும்பித்து. ஐந்து - ஐம்புல ஆசை. 'ஐம்புலஆசையைப் பிராணாயாமத்தில் அடக்கி' என்றபடி.'பிராணாயாமம்' என்றது உபலக்கணம் ஆதலின், அஃதுஏனைய ஏழ் உறுப்புக்களையும் தழுவி, 'யோகம்' எனப்பொருள் தந்தது. "உள்ளம்" என்றதும் 'உயிர்'என்னும் பொருளதே. எனவே, "உள்ளத்து உயிர்"என்றது, 'உயிர்க்கு உயிர்' என்றவாறாம். சக்தியை,'தாள்' என்றல் மரபு. உயிரான். உயிராய் இருப்பவன்.'உயிருக்கு உயிராய் உள்ளது சக்தி; சக்திக்குஉயிராய் உள்ளது சிவம்' - என்றபடி. "பகர்"இரண்டனுள் முன்னது, 'அறுகுணங்களின் தொகுதியாகியபகத்தை யுடையவர்' என்னும்
1. திருமுறை - 6.1.
|