பக்கம் எண் :

497சிவபெருமான் திருவந்தாதி

659.பெற்றும் பிறவி பிறந்திட் டொழியாதே
பெற்றும் பிறவி பிறந்தொழிமின்; - பெற்றும்
குழையணிந்த கோளரவக் கூற்றுதைத்தான் தன்னைக்
குழையணிந்த கோளரவ நீ.

3

660.நீயேயா ளாவாயும் நின்மலற்கு; நன்னெஞ்சே,
நீயேயா ளாவாயும் நீள்வாளின், - நீயேயேய்
ஏறூர் புனற்சடையா, எங்கள் இடைமருதா,
ஏறூர் புனற்சடையா என்று.

4


“பம்” என்பது ஒலிக்குறிப்பு. நாண் - வில் நாண். தனிச் சீரில், அம், அழகு. அதன் முதல் வகர உடம்படுமெய் பெற்று ‘வம்’ என வந்தது. எதுகை நோக்கி, “பம்” எனத் திரிந்தது. அழகு ஆகுபெயராய் உடம்பைக் குறித்தது. ஈற்றடியில் அம் - நீர்; கங்கை.

659. குறிப்புரை:முதல் அடியில் ‘பிறவி பெற்றும்’ என மாற்றி, “பிறந்திட்டு” என்பதற்குப் ‘பிறந்ததனோடு’ என உரைக்க. “பிறவி” என்பது சிறப்புப் பற்றி, மக்கட் பிறவியையே குறித்தது. இரண்டாம் அடியில் பெற்றும் பிறவி - பெருகி வரும் பிறவிகள். பெற்று - பெருக்கம். அதனை, “ஏ பெற்றாகும்”1 என்னும் தொல்காப்பியத்தால் அறிக. பின்னர் வந்த “பிறந்து” என்பது அனுவாதம் ஆகலான் அதற்கு. ‘அது செய்து’ என உரைக்க. ‘பிறவியை ஒழிமின்’ என்க. மூன்றாம் அடியில் “குழை” என்பதில் ‘குழையாக’ என ஆக்கம் விரிக்க. “கோள் அரவம்” இரண்டில் முன்னது கொடிய பாம்பு; பின்னது, சில கொள்கைகளோடு கூடிய ஆரவாரம். பெற்றும் குழை - குழைய (திருவுளம் இரங்க)ப் பண்ணு. அண் - (அவனையே) அணுகு. நீ - நீத்துவிடு. ‘இந்த’ என்னும் சுட்டின்முன் ககர ஒற்று தொகுத்தலாயிற்று. இவற்றிற்கெல்லாம் முன்னிலையாக. ‘நெஞ்சமே’ என்பது வருவிக்க.

660. குறிப்புரை: “நன்னெஞ்சே” என்பதனை முதலிற் கொள்க. கொண்டு அதன்பின், பின் இரண்டடிகளைக் கூட்டி, ‘நீ ஏய்; (ஏய்ந்தால்) நின்மலற்கு ஆள் ஆவாயும் நீயே; (மற்றும்) யாவாயும் நீள் வாளின் நீயே ஆள்’ என முடிக்க. ‘ஆள் ஆவாய்’ என்றது. ‘அடியார்களுள் சிறந்தனை ஆவாய்’ என்றபடி. யா வாயும் - எந்த இடத்தையும். “வாள்” என்றது படைக்கலப் பொது. அது நெற்றியைக் குறிக்கும் குறிப்பாயிற்று. ஏய் - பொருந்து. “ஏறூர் புனற் சடையா” என வந்த இரண்டினுள் ஒன்றை, ‘உயர்தல் மிகுந்த நீரை அணிந்த நல்ல சடையவனே’ என்னும் பொருட்டாகவும், மற்றொன்றைப் புல் ஏறு ஊர் நல் சடையா (புல்லை உண்கின்ற இடபத்தை ஊர்கின்ற, நல்ல ‘சடை’ என்னும் அத்தியயனத்தை விரும்புபவனே) என்னும்


1. சொல் - உரியியல்.