பக்கம் எண் :

539சிவபெருமான் திருமும்மணிக்கோவை

இளம்பெருமான் அடிகள்
அருளிச் செய்த

24. சிவபெருமான் திருமும்மணிக்கோவை

அகவற்பா
திருச்சிற்றம்பலம்

757.முதல்வன் வகுத்த மதலை மாடத்து
இடவரை ஊன்றிய கடவுட் பாண்டிற்
பள்ளிச் செம்புயல் உள்விழு துறீஇப்
புத்தேள் நிவந்த முத்த மாச்சுடர்
5எறிவளி எடுப்பினும் சிறுநடுக் குறாநின்
அடிநிழல் அளியவோ வைத்த முடிமிசை
இலங்குவளைத் தனிப்போது விரித்த
அலங்குகதிர் ஒலியல்நீ அணிந்ததென் மாறே.

1


மும்மணிக்கோவையின் இலக்கணம் மேற் சொல்லப் பட்டது.

757. குறிப்புரை: முதல்வன் - சிற்பம் வல்லாருள் தலையாயவன். மதலை - தூண்களையுடைய ‘மாடம்’ என்க. மாடம் - உயர்நிலை மாடம். திருக்கோயிலின்உட் கருவறை. ஊன்றிய - அழுந்த வைத்த. கடவுட் பாண்டில் - தெய்வத் தன்மை பொருந்திய வட்டம். இதனைக் ‘கூர்மாசனம்’ என்பர். ‘பாண்டிலாகிய பள்ளி’ என்க. பள்ளி - தங்கும் இடம். ‘பள்ளியின்கண்’ என ஏழாவது விரிக்க. செம்புயல் - மாலைக் காலத்தில் காணப்படுகின்ற சிவந்த மேகம். ‘மேகம் போல’ எனவும் ‘விழுதுபோல’ எனவும் உவம உருபு விரிக்க. ‘விழுது போல’ என்றது இலிங்க வடிவத்தை. புத்தேள் நிவந்த முத்த மாச்சுடர் - கடவுள் தன்மை மேல் எழுந்து தோன்றிய முத்தோளியே. முத்தோளி உவமையாகு பெயர். முத்து, உயர் வாகிய குறிப்புப் பற்றி வந்த உவமை. ‘முத்தோளி’ என்றது சிவ பெருமானை. சுடர், அண்மை விளி. ‘தலங்கள்’ தோறும் இலிங்க வடிவில் கோயில் கொண்டு விளங்கி அருள் புரிகின்ற பெருமான் என்றபடி. ஏறிவளி - பெருங்காற்று. ‘பெருங்காற்று அடிக்கினும் சிறிதும் அசைவுறாத உனது திருவடி அரியவோ’ (எளியவோ) என்க. ‘எளிய அல்ல ஆயினும் அவற்றை நீ சூட்டிய எங்கள் தலைமேல் மற்றும் உனது குவளை மலர் மாலையைச் சூட்டியது எக்காரணத்தால்’ என முடிக்க. ஞான தீக்கை செய்யும் காலத்துக் குவளை மாலையைச் சூட்டுதல் மரபு. “கழுநீர்