வெண்பா 809. | சூர்தந்த பொற்குவட்டின் சூளிகையின் வானயிர்த்து வார்தந் தெழுமதியம் மன்னுமே - சீர்தந்த மாமதலை வான்மதியங் கொம்பு வயிறுதித்த கோமதலை வாண்மதியங் கொம்பு. | | 23 |
திருச்சிற்றம்பலம் (இப் பிரபந்தத்தில் இதற்குமேல் உள்ள பாடல்கள் கிடைக்கவில்லை).
- ஆகாயம் நிறையும்படி உயர்ந்து, அசும்பு - கசிவு; மதநீர். அஃது இரு காதுகள் வழி ஒழுகுதலால். “இரண்டு அசும்பு பொழியும்” என்றார். முரணிய - மாறுபடும்படி. “இரைத்து விழும்” என்றதனால். கரம், தும்பிக்கையாயிற்று. செறிக்கும் - அடைக்கும். இடுந்தொறும் - பெயர்த்து வைக்குந்தோறும். அம் சுடர்ப்பிழம்பு தழீஇ - அழகிய தீயினது உருவம் போன்ற தோற்றத்தைப் பொருந்தி. “அழகிய” என்றதனால் தோற்றம் மாத்திரையே தீப்போலும் தன்மை யுடையதன்றிச் சுடுதல் இன்மை பெறப்பட்டது. ‘அவற்றொடும் எம் நெஞ்சகத்து ஒடுங்கும்’ என முடிக்க. ஓகாரம் வியப்புக் குறிப்பு. இதனால் பிள்ளையாரது பேருருவத் தோற்றம் இனிது விளங்கும். 809. குறிப்புரை: தனிச்சீர் முதலாகத் தொடங்கியுரைக்க. சீர் தந்த மா மதலை - தந்தையாகிய மலையரையனுக்குப் புகழைத்தந்த பெருமையையுடைய மகள். வான்மதி - மிகுந்த ஞானமே வடிவானவள். அம் கொம்பு - அழகிய பூங்கொம்பு போன்றவள்; உமை. அவள் வயிற்றின்கண் உதித்த கோ மதலை - தலை மகன், விநாயகர் கடவுள். அவன் முடியில் அணிந்த வாள் மதிக்கொம்பு - ஒளி பொருந்திய பிறைக் கீற்று. சூர் தந்த பொற்குவட்டின் குளிகையின் அயிர்த்து - அச்சத்தைத் தரும் பொன்மலையினது சிகரத்தின் நெற்றி’ என மருண்டு. வார்தந்து எழுவான் மதியம் மானும் - ஊர்தலை மேற்கொண்டு தோன்றிய வானப் பிறையை ஒக்கும். பிள்ளையார் தமது திருமுடியில் அணிந்துள்ள பிறை அம்முடியை வானத்தில் செல்லும் பிறை. ‘பொன்மலையின் சிகரம்’ என மயங்கி வந்து பொருந்தியதுபோல் உள்ளது என்பதாம். இது தற்குறிப் பேற்றமும், மயக்க அணியும் சேர்ந்து வந்த சேர்வையணியாகும்.
|