அகவற்பா 813. | உரையின் வரையும், பொருளின் அளவும் இருவகைப் பட்ட எல்லையும் கடந்து தம்மை மறந்து, நின்னை நினைப்பவர் செம்மை மனத்தினும், தில்லைமன் றினும்நடம் | 5 | ஆடும் அம்பல வாண! நீடு குன்றக் கோமான் தன்திருப் பாவையை நீல மேனி மால்திருத் தங்கையைத் திருமணம் புணர்ந்த ஞான்று, பெரும!நின் தாதவிழ் கொன்றைத் தாரும், ஏதமில் | 10 | வீர வெள்விடைக் கொடியும், போரில் தழங்கும் தமருகப் பறையும், முழங்கொலித் தெய்வக் கங்கை ஆறும், பொய்தீர் விரையாக் கலியெனும் ஆணையும் நிரைநிரை ஆயிரம் வகுத்த மாயிரு மருப்பின் | 15 | வெண்ணிறச் செங்கண் வேழமும் பண்ணியல் வைதிகப் புரவியும், வான நாடும், மையறு கனக மேருமால் வரையும், செய்வயல் தில்லை யாகிய தொல்பெரும் பதியும்நின் ஒருபதி னாயிரந் திருநெடு நாமமும் | 20 | உரிமையிற் பாடித் திருமணப் பந்தருள் அமரர் முன்புகுந்(து) அறுகு சாத்தியநின் தமர்பெயர் எழுதிய வரிநெடும் புத்தகத்து என்னையும் எழுத வேண்டுவன், நின்னருள் ஆணை வைப்பிற், காணொணா அணுவும் வானுற நிமிர்ந்து காட்டும்; | 25 | கானில்வாய் நுளம்பும் கருடனா தலினே. | | 4 |
813.குறிப்புரை: ‘சொல்லுலகம், பொருளுலகம்’ என இருவகைப்பட்ட உலகங்களையும் கடந்தவன் இறைவன் என்பார் “உரையின் வரையும்.... கடந்து”என்றார். “தாம்” என்றது உயிர்களை. நினைத்தல், இங்கு உணர்தல். உயிர்கள் தம்மை உணரும் உணர்வு ‘யான்’ என்றும் ‘எனது’ என்றும் இருவகையாக நிகழும். இவ்விருவகை உணர்வும் உள்ள பொழுது இறைவனை உணரும் உணர்வு நிகழாதுஆகலின், “தம்மை மறந்து நின்னை நினைப்பவர்” என்றார்.“அவரது
|