- சிவந்து. கற்பகத்தின்கண்’ என உருபுவிரிக்க வழுவழுப்புத் தோன்றுதற் பொருட்டு, நெய்யில் தோய்த்தல் கூறப்பட்டது. செவ்வி - பக்குவம். நூபுரம் - சிலம்பு. “கிடப்பினும்” என்னும் அனுவாதத்தால்கிடத்தல் பெறப் பட்டது. மட வரல் மகளிர் - மடப்பம்(இளமை) வருதலை உடைய மகளிர். வீழ்த்த - தூவிய. சின்னம்- சிறுமை. எஞ்ச - தோற்க. இது மென்மை மிகுதியைக் கூறியது. எஞ்சாத் திரு - குறையாத அழகு. பொலியும் -விளங்கும். அடி - 21 “ஒருபால் திருஇடை”என்பதை, “நீலப் புள்ளி” என்பதற்கு முன்னே கூட்டி,‘விரித்து அசைத்து, யாப்புறுத்துப் பொலிந்துளது’என்க. வாள் - கூர்மை. உகிர் - நகம். ‘புள்ளியையும்,உகிரையும் உடைய வேங்கை’ என்க. கலிங்கம் - உடை. அசைத்து . உடுத்தி. யாப்பு உறுத்து - இறுகக் கட்டி. அடி - 24 “ஒருபால் திருஇடை” என்பதை “இலங்கொளி” என்பதற்கு முன்னே கூட்டி,‘விரித்து, உறீஇ சாத்திய மருங்கிற்று ஆகும்’ என்க. அரத்தம் - செம்மை. ஆடை - பட்டாடை. உறீஇ - உறுவித்து;பொருந்தப் பண்ணி. இரங்கு - ஒலிக்கின்ற. மணி மேகலை- இரத்தினங்களால் ஆகிய வடங்களின் தொகுதி. மருங்கிற்று - பக்கங்களை யுடையது. அடி - 29 “ஒருபால் ஆகம்”என்பதை செங்கண் அரவும்” என்பதற்கு முன்னே கூட்டி,“இடம் கொண்டு” என்பதை ‘இடம் கொள’ எனத் திரித்து,‘அரவும் ஆமையும், கோடும், அக்கும், நூலும் இடம்கொளப் புனைந்து வெற்பென்னத் திகழும் என்க. ஆகம்- மார்பு ஆமை - ஆமை ஓடு; ஆகுபெயர் கேழல் - பன்றி, அக்கு- எலும்பு. நுடங்குதல் - துவளுதல். நூல், முந்நூல் தவளம் -வெண்மை. நீறணிந்தது ஓர் பவள வெற்பு, இல்பொருள்உவமை. அடி - 34 “ஒருபால் ஆகம்”என்பதை, “வாரும் வடமும்” என்பதற்கு முன்னே கூட்டி,‘புனைந்து, அணிந்து, எழுதித் தளரா முலையுடன் பொலியும்’ என்க. வார் - கச்சு. வடம் - மணி வடங்கள்.ஏர் - அழகு “புனைந்து” முதலிய மூன்றும், ‘புனையப்பட்டு, அ ணியப்பட்டு, எழுதப்பட்டு’ எனச் செயப் பாட்டுவினைப்பொருளவாய் நின்றன. ‘குங்குமத்தால்’ எனமூன்றாவது விரித்து, ‘கோலம் எழுதி’ என்க. “பொற்றாமரை”என்பதும் இல்பொருள் உவமை முகிழ் - அரும்பு. அடி - 38 “ஒரு பால் திருக்கரம்”என்பதை, “அயில் வாய் அரவம்” என்பதற்கு முன்னேகூட்டி, ‘அணிந்து தாங்கிச் சிறந்துளது’ என்க. அயில்- கூர்மை. வாய் - பல்; ஆகுபெயர். வயின் வயின் -முன்கை. முழங்கை, தோள் ஆகிய இடங்கள். அணிந்து -பூண்டு. பூ வாய் - மெல்லிய வாய். கூர்மை மிகுதியால்மெல்லிதாயிற்று. தமருகம் - உடுக்கை. அமர்தர -பொருந்த
|