பக்கம் எண் :

741திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலை

நம்பியாண்டார் நம்பிகள்
அருளிச் செய்த

31. திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலை

வெண்பா
திருச்சிற்றம்பலம்

1002.என்னை நினைந்தடிமை கொண்டேன் இடர்கெடுத்துத்
தன்னை நினையத் தருகின்றான்- புன்னை
விரசுமகிழ் சோலை வியன்நாரை யூர்முக்கண்
அரசுமகிழ் அத்திமுகத் தான்.

1

கட்டளைக் கலித்துறை

1003.முகத்தாற் கரியனென் றாலும் தனையே முயன்றவர்க்கு
மிகத்தான் வெளியனென் றேமெய்ம்மை உன்னும் விரும்படியார்

1002. இரட்டைமணி மாலை பற்றிக் காரைக்கா லம்மையார் பிரபந்த உரையுட் காண்க.

குறிப்புரை: விரசு - நெருங்கிய, "மகிழ்" இரண்டில் முன்னது மகிழ மரம்; பின்னது மகிழ்ச்சி. அத்தி - யானை. அரசு, 'அரசமரம்' எனவும், அத்தி, 'அத்தி மரம்' எனவும் வேறொரு பொருளைத் தோற்றுவித்தலாகிய நயத்தைப் பயந்தது. அந்நயம் முரண் தொடையாம். 'நாரையூர்' அத்தி முகத்தான்' என இயைக்க. இவ்விநாயகர், 'பொல்லாப் பிள்ளையார்' என்னும் பெயர் உடையர். இப் பெயர்ப் பொருளைச் சிவஞான போத மங்கல வாழ்த்து உரையிற் காண்க. 'இப்பெருமானுக்கு யான் அடியன் ஆனதும்அவன் என்னை நினைந்து அடிமை கொண்டதனாலும், பின்பும் நான் அவனை மறவாது நினைதலும் அவன் நினைப்பிப்பத னாலுமே' என்பதாம். 'இப்பெருமானுக்கு யான் செய்யும் கைம்மாறு யாது? என்பது குறிப்பெச்சம். இதனால் 'இவ்வாசிரியர் விநாயகப் பெருமானது திருவருளை எய்திய அருளாளர்' என்பது போந்தது.

1003. குறிப்புரை: கரியன் - யானையாகியவன். வெளியன் - வெளிப்பட்டு நிற்பவன். இவை இரண்டும் முறையே 'கருநிறத்தை உடையவன், வெண்ணிறத்தையுடையவன்' எனப் பிறிதுமோர்