தனதந் தத்தனத் தனந்தன 1384. | சிவசம் பத்திடைத் தவஞ்செய்து | | திரியும் பத்தியிற் சிறந்தவர் | | திலகன், கற்றசிட் டன்வெந்தொளி | | திகழும் பைம்பொடித் தவண்டணி |
பகைமை யுள்ளத்தோடே இருந்தால் சமண் மூகர்க்கு சிவலோகக் கதி இழவுற்றது” என்க. இழவு - இழப்பு. “திருநாவுக்கரசரைச் சமணர் சொற்கேட்டு முதலில் பல ஒறுப்புக்கு உள்ளாக்கிய பல்லவ மன்னன் அவர் கல்லே மிதப்பாகக் கடலைக் கடந்து கரையேறிய பின்பு அவரது பெருமையை உணர்ந்து அவரை வணங்கிச் சைவனாகிச் சிவாலயப் பணிகளைச் செய்தான். அவைகளைக் கண்ட பின்பும் சமணர்கள் திருந்தவில்லை. அதனால் யாருக்கு இழப்பு? சமணர்க்குத்தான் இழப்பு” என்றபடி. இது பற்றியே நாவுக்கரசரும் அவர்களை, “திருந்தா அமணர்”1 எனக் குறித்தருளினார். ‘என்னை’ என்னும் வினாப்பெயர் இடைக் குறைந்து “எனை” என நின்றது. ஓகாரம் இரக்கப் பொருட்டு. மொட்டு - அரும்பு. அகலுதல் - அது கட்டவிழ்ந்து மலர்தல். மொட்டுக் கட்டவிழ்ந்து மலர்தல் போல உள்ளம் அறியாமைப் பிணி நீங்க விரிவடைதலை, “மொட்டு அகல்வு” என்றார். “அத்தகைய செயலில் அதற்கு உரித்தாக ஒன்றையும் பெறுதல் இல்லாத பிண நூல்” என்க. பிண நூல் - உயிரற்ற நூல். “அதனைப் பெருக (மிகவும்)ப் பொருளாகக் கருதும் சமண் மூடர்” என்க. ‘தேவர்க்கும்’ என்னும் உயர்வு சிறப்பும்மை தொகுக்கப்பட்டது. பசு - பசுத் தன்மை. அஃதாவது, பாசத்தால் கட்டுண்ணும் தன்மை. தைத்தல் - பொருந்துதல். “தை சிறியோர்” என்னும் வினைத் தொகையில் வல்லொற்று மிக்கது விரித்தல். “உறி கை” என்னும் இரண்டாவதன் தொகையில் வல்லொற்று மிகாமை தொகுத்தல். “அரிது” இரண்டும் ‘அரிதாயது’ எனக் குறிப்பு வினையாலணையும் பெயர். அவற்றுள் முன்னதில் அருமை இன்மை குறித்து நின்றது. செடி காயம் - (குளித்தல் இல்லாமையால்) முடை நாற்றம் பொருந்திய உடம்பு. பாட்டு:10 சிவ சம்பத்து - சிவ நெறியாகிய செல்வம். (சிறந்தவர்க்கு) என நான்காவது விரிக்க. திலகன் - அழகு தருபவன்.
1.திருமுறை - 4
|