பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
193

யூ

மதியுடம் படுத்தல்

    யூரென்ன வென்னவும் வாய்திற
        வீரொழி வீர்பழியேற்
    பேரென்ன வோவுரை யீர்விரை
        யீர்ங்குழற் பேதையரே.

56

_______________________________________________________________

ஒருகலையாகிய திங்களை வைத்த; கார் என்ன ஆரும் கறை மிடற்று அம்பலவன் கயிலை - கொண்டலென்று சொல்லும் வண்ணம் நிறைந்த கறுப்பையுடைத்தாகிய மிடற்றையுடைய அம்பலவனது கயிலைக்கண்; ஊர் என்ன என்னவும் வாய்திறவீர் - நும்முடைய ஊர்கள் பெயர் முதலாயினவற்றான் எத்தன்மைய வென்று சொல்லவும் வாய்திறக்கின்றிலீர்; பழியேல் ஒழிவீர் - ஊர் கூறுதல் பழியாயின் அதனையொழிமின்; பேர் என்னவோ விரை ஈர்ங் குழல் பேதையரே உரையீர் - நும்முடைய பெயர்கள் எத்தன்மையவோ நறுநாற்றத்தையும் நெய்ப்பையுமுடையவாகிய குழலையுடைய பேதையீர், உரைப்பீராமின் எ-று.

    தனித்திங்கள் ஒப்பில்லாத திங்களெனினுமமையும். ஓகாரம்: வினா.  தலைமகளுந் தோழியும் ஓரூராரல்லரென்று கருதினான் போல ஊரென்னவெனப் பன்மையாற் கூறினான். என்னை,

இரந்து குறையுறாது கிழவியுந் தோழியு
    மொருங்குதலைப் பெய்த செவ்வி நோக்கிப்
    பதியும் பெயரும் பிறவும் வினா அய்ப்
    புதுவோன் போலப் பொருந்துபு கிளந்து
    மதியுடம் படுதற்கு முரியனென்ப.

-இறையனாரகப்பொருள், 6

என்பதிலக்கணமாதலின். பேதையரேயெனச் சிறுபான்மை ஏகாரம் பெற்றது. ஊருஞ் சொல்லாதாரைப் பெயர்கேட்கவே வேறு கருத்துடையனென்பது விளங்கும். வாய் திறவா தொழிவீ ரென்பதூஉம் பாடம்.