11
குறை நயப்புக் கூறல்
11.5 வஞ்சித் துரைத்தல்
வஞ்சித்துரைத்தல் என்பது நாணினாற்
நேரமாட்டாது வருந்தாநின்ற தலைமகள் இவளும் பெருநாணினளாதலின் என்னைக் கொண்டே சொல்லுவித்துப்பின்
முடிப்பாளாயிரா நின்றாள்; இதற்கியா னொன்றுஞ் சொல்லாதொழிந்தால் எம்பெருமான் இறந்துபடுவனென
உட்கொண்டு, தன்னிடத்து நாணினை விட்டு, பாங்கற்கூட்டம் பெற்றுத் தோழியிற் கூட்டத்திற்குத்
துவளாநின்றா னென்பது தோன்ற, பின்னும் வெளிப்படக் கூற மாட்டாது மாயவன்மேல் வைத்து வஞ்சித்துக்
கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
86. புரங்கடந் தானடி காண்பான்
புவிவிண்டு புக்கறியா
திரங்கிடெந் தாயென் றிரப்பத்தன்
னீரடிக் கென்னிரண்டு
_____________________________________________________________
11.5. நெஞ்சம் நெகிழ்வகை
வஞ்சித் திவையிவை
செஞ்சடை யோன்புகழ் வஞ்சிக்
குரைத்தது.
இதன் பொருள்; புரம் கடந்தான்
அடி காண்பான் - புரங்களைக் கடந்தவனது அடிகளைக் காணவேண்டி; புவி விண்டு புக்கு அறியாது இரங்கிடு
எந்தாய் என்று இரப்ப - நெறி யல்லா நெறியான் நிலத்தைப் பிளந்து கொண்டு புக்குக் காணாது
பின் வழிபட்டு நின்று எந்தாய் அருளவேண்டு மென்றிரப்ப; தன்ஈரடிக்கு என் இரண்டு கரங்கள் தந்தான்
ஒன்று காட்ட - தன்னுடைய இரண்டு திருவடிகளையுந் தொழுதற்கு என்னுடைய இரண்டு கரங்களையுந் தந்தவனாகிய
அவன் சிறிதிரங்கி ஒரு திருவடியைக் காட்ட; மற்று ஆங்கதும் காட்டிடு என்று தில்லை அம்பல
முன்றில் அம் மாயவன் வரம் கிடந்தான் - மற்றதனையுங் காட்டிடல் வேண்டுமென்று தில்லையம்பல
முற்றத்தின்கண் முன்னர் அவ்வாறு யானென்னுஞ் செருக்காற் காணலுற்ற மாயவன் வரங்கிடந்தாற்போலும்
எ-று
விண்டென்பதற்கு (தி.8
கோவை பா.24) முன்னுரைத்ததே யுரைக்க, மாயவன் முதலாயினார்க்கு அவ்வாறரியவாயினும் எம்மனோர்க்கு
இவ்வாறெளிவந்தன வென்னுங் கருத்தால், தன்னடிக் கென்னிரண்டு கரங்கடந்தா னென்றார்.
|