பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
313

அண

பகற் குறி

    அணியார் கயிலை மயில்காள்
        அயில்வே லொருவர்வந்தால்
    துணியா தனதுணிந் தாரென்னு
        நீர்மைகள் சொல்லுமினே.

145

13.31 வறும்புனங்கண்டுவருந்தல்

   
வறும்புனங்கண்டு வருந்தல் என்பது தலைமகளும் தோழியும் புனங்காவலேறிப் போகாநிற்ப, தலைமகன் புனத்திடைச் சென்று நின்று, இப்புனம் யாமுன்பயின்றதன்றோ? இஃதின்றிருக்கின்றவாறென்னோ வென்று, அதன் பொலிவழிவுகூறித் தலைமகளைத்தேடி வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்-

146. பொதுவினிற் றீர்த்தென்னை யாண்டோன்
        புலியூ ரரன்பொருப்பே
    இதுவெனி லென்னின் றிருக்கின்ற
        வாறெம் மிரும்பொழிலே

______________________________________________________________

மயில் காள் என்றுகூட்டி, நீரெம்மை மறப்பீராயினும் மறவாது சொல்லுமினென்றுரைப்பாருமுளர். இவையாறற்கும் மெய்ப்பாடும் பயனும் அவை.

145

13.31.  மென்புனம்விடுத்து மெல்லியல்செல்ல
      மின்பொலிவேலோன் மெலிவுற்றது.

   
இதன் பொருள்: பொதுவினில் தீர்த்து என்னை ஆண்டோன் - அதுவோ விதுவோ வழி யென்றுமயங்கிப் பொதுவாக நின்ற நிலைமையை நீக்கி என்னையாண்டவன்; புலியூர் அரன் - புலியூரிலரன்; பொருப்பே எனில் இது இன்று இருக்கின்றவாறு என் - அவனது பொருப்பாய் யான்முன்பயின்ற விடமேயாயின் இஃதின்றிருக்கின்றவாறென்; எம் இரும் பொழிலே -எம்முடைய பெரிய பொழிலே; நுமக்கு எய்தியது எது-நுமக்குத்தான் இன்றுவந்த தியாது; என் உற்றனிர் - நீரென்னுற்றீர்; இவ் வான் புனம் -இதுவேயுமன்றி இப்பெரிய புனம்; அறை ஈண்டு அருவி மதுவினில் கைப்பு வைத்தால் ஒத்தவா - ஒலியாநின்ற பெருகிய வருவியாய் விழும் மதுவின்கண் அதனின்சுவையை மாற்றிக் கைப்பாகிய சுவையை வைத்தாலொத்தவாறென்! எ-று.