14
14. இரவுக்குறி
இரவுக்குறி வருமாறு, பகற்குறிபுணர்ந்து
விலக்கப்பட்ட தலைமகன் தெருண்டு வரைதறலை. தெருளானாயிற் பின்னையுந் தோழியைத் தலைப்பட்டு
இரவுக்குறிவேண்டிச்சென்று எய்து தன்முறைமையென்ப. என்னை,
‘களவினுட் டவிர்ச்சி கிழவோற்கில்லை”
- இறையனாரகப் பொருள்,
33
என்றாராகலின்.
இரவுக்குறி வேண்ட லாற்றருமை கூற
னின்றுநெஞ் சுடைத னிலைகண்டு நேர்த
லுட்கொள வினாத லுட்கொண்டு வினாதல்
குறியிடங் கூறல் குறியேற் பித்த
லிரவர வுரைத்த லேதங் கூறல்
குறைநேர்த லோடு குறைநயப் புரைத்தன்
மயின்மே லிசைத்து வரவுணர்ந் துரைத்தன்
றாய்துயி லறித றலைவிதுயி லெடுத்த
லிடத்துய்த்து நீங்க றளர்வகன்
றுரைத்த
மருங்கணைத லோடு முகங்கண்டு மகிழ்தல்
பள்ளியிடத் துய்த்தல் பள்ளியிடத்
துய்த்து
வரைவு கடாவி வரவு விலக்கல்
வரைவு டம்படா தாற்றா துரைத்த
லதரிடைச் செலவிற் கிரக்கங் கூற
லிருளற நிலவு வெளிப்பட வருந்தல்
_____________________________________________________________
இரவுக்குறி - இதன்
பொருள்: இரவுக்குறி
வேண்டல், வழியருமை கூறி மறுத்தல், நின்று நெஞ்சுடைதல், இரவுக்குறிநேர்தல், உட்கொளவினாதல்,
உட்கொண்டுவினாதல், குறியிடங்கூறல், இரவுக்குறியேற்பித்தல், இரவரவுரைத்தல், ஏதங்கூறிமறுத்தல்,
குறைநேர்தல், குறைநேர்ந்தமை கூறல், வரவுணர்ந்துரைத்தல், தாய்துயிலறிதல், துயிலெடுத்துச்சேறல்,
இடத்துய்த்துநீங்கல், தளர்வகன்றுரைத்தல், மருங்கணைதல், முகங்கண்டு மகிழ்தல், பள்ளியிடத்துய்த்தல்,
வரவு விலக்கல், ஆற்றாதுரைத்தல், இரக்கங்கூறி வரைவுகடாதல், நிலவு வெளிப்படவருந்தல், அல்லகுறியறிவித்தல்,
கடலிடை வைத்துத் துயரறி வித்தல், காமமிக்க கழிபடர்கிளவி, காப்புச்சிறை மிக்ககையறு
கிளவி, ஆறுபார்த்துற்றவச்சக்கிளவி, தன்னுட்கையா றெய்திடுகிளவி, நிலைகண்டுரைத்தல், இரவுறுதுயரங்
கடலொடுசேர்த்தல், அலரறி வுறுத்தல் எனவிவை முப்பத்துமூன்று மிரவுக்குறியாம் எ-று.
|