பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
33

கரங

ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை

கரங்கள்தந்தான் ஒன்றுகாட்டிட மற்றாங்கதும் காட்டிடென்று
    வரங்கிடந்தான் தில்லையம்பல முன்றில்அம் மாயவனே.

(தி.8 கோவை பா.86)

இப்பாடலுக்குப் பேராசிரியர் “புரங்கடந்தான் அடிகளைக் காணமுற்பட்ட மாயோன் பன்றியாய்த் தாமரையையும், நான்முகன் அன்னமாய்க் காட்டையும் தேடுதலால் கண்டிலர் இது நெறியல்லா நெறியாயிற்று” என எழுதும் உரை கற்போர்க்குப் பெருவிருந்தாய் அமைவது.

மணிவாசகர் காலம்: 

மேலும் இப்பாடல் மணிவாசகர் காலத்தை அறிதற்குத் துணை புரிவதாகும். தில்லை நடராசர் கோயிலின் முன்பில் திருச்சித்திரக்கூடம் என்னும் பெருமாள் சந்நிதியை அமைத்தவன் திருமங்கையாழ்வார் காலத்தில் வாழ்ந்த நந்திவர்மப்பல்லவ மன்னன் ஆவான். இவனது காலம் எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும். மணிவாசகர் இத்திருக்கோவையாரில் தில்லை முன்றிலில் விளங்கும் மாயோனைக் குறிப்பிடலால் அவரது காலம் 8ஆம் நூற்றாண்டுக்கு முன்னரன்று என ஆய்வாளர் கூறுவது சிந்தனைக்குரியது.

தமிழ்ப்பண்பாடு: 

மணிவாசகர் திருக்கோவையாரில் குறிப்பிடும் அரிய தமிழ்ப் பண்பாட்டை அறிதல் பயனுடையதாகும்.

உடன் போக்கு என்னும் துறையில் தலைமகனுடன் சென்ற தலைமகளைத் தேடிக்கொண்டு சென்று செவிலித்தாய் தன்மகளையும் அவள் காதலனையும் ஒத்த காதலர்களாய்த் தனக்கு எதிரே வந்த இருவரைக் கண்டு அவர்களை அணுகி வினாவினாள். இம்மேதகவே பூண்டார் இருவர் முன்போயினரோ என்பதே அவ்வினா. அவ்வினாவின் மறுமொழியே தமிழ்ப் பண்பாடால் மிளிர்கிறது. அவ்விருவருள் தலைவன் அவளுக்கு மறுமொழி கூறும் நிலையில் அமைந்த திருக்கோவையார்ப் பாடல் இது.

    மீண்டா ரெனவுவந்தேன் கண்டுநும்மை இம்மேதகவே
    பூண்டார் இருவர்முன்போயினரே? புலியூர் எனைநின்று
    ஆண்டான் அருவரை ஆளியன்னானைக் கண்டேன், அயலே
    தூண்டா விளக்கனையாய் ! என்னையோ அன்னை சொல்லியதே.

(தி.8 கோவை பா. 244)

    காதலராய் வரும் நும் இருவரது தோற்றத்தைக் கண்டு நான் தேடி வந்த என் மகளும் அவளை அழைத்துச் சென்ற காதலனும் ஆகிய