பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
357

15


15. ஒருவழித்தணத்தல்

இவ்வாறிரவுக்குறிபுணர்ந்து, அலரெழுந்ததென்று விலக்கப்பட்ட பின்னர்த் தெருண்டுவரைதறலை. தெருளானாயின், அவ்வலரடங்கச் சிலநாளொருவழித்- தணந்துறைதல், உடன் கொண்டு போதல், தோழியான் வரைவுமுடுக்கப்பட்டு அருங்கலம்விடுத்து வரைந்துகோடல் இம்மூன்றினுளொன்று முறைமை யென்ப. அவற்றுள், ஒருவழித்தணத்தல் வருமாறு:-

    அகன்றணைவு கூற லாழியொடு கேட்ட
    லாழியொடு புலத்த லன்னமோ டாய்த
    லாழிக் குரைத்த லாழி யிழைத்தல்
    சுடரொடு புலம்பல் பொழுதுகண்டு மயங்கல்
    பையு ளெய்தல் பரிவுற் றுரைத்த
    லன்னமோ டழிதல் வரவுணர்ந் துரைத்தல்
    வருத்தங் கூறல் வருபதின் மூன்றுந்
    திருத்திய வொருவழித் திறனா கும்மே.

_________________________________________________________

    ஒருவழித்தணத்தல் - இதன் பொருள்: அகன்றணைவுகூறல். கடலொடுவரவுகேட்டல், கடலொடுபுலத்தல், அன்ன மோடாய்தல், தேர்வழிநோக்கிக் கடலொடுகூறல், கூடலிழைத்தல், சுடரொடுபுலம்பல், பொழுது கண்டுமயங்கல், பறவையொடுவருந்தல், பங்கயத் தோடு பரிவுற் றுரைத்தல், அன்னமோடழிதல், வரவுணர்ந் துரைத்தல், வருத்தமிகுதி கூறல் எனவிவை பதின்மூன்றும் ஒருவழித் தணத்தலாம் என்றவாறு. அவற்றுள்-