மல
வரை பொருட் பிரிதல்
மல்லார் கழலழல் வண்ணர்வண்
தில்லை தொழார்களல்லாற்
செல்லா அழற்கட மின்றுசென்
றார்நம் சிறந்தவரே.
271
______________________________________________________________
வெல்லா நிதியத்தையும் ஒருங்கே
வரவிடுவான் வேண்டி; இமையோர் இறைஞ்சும் மல் ஆர் கழல் அழல் வண்ணர் வண் தில்லை-இமையோர்
சென்று வணங்கும் வளமார்ந்த கழலையுடைய அழல் வண்ணரது வளவிய தில்லையை; தொழார்கள் அல்லால்
செல்லா அழல் கடம் இன்று சென்றார்-தொழாதாரல்லது நம்போல்வார் செல்லாத அழலையுடைய சுரத்தை
இன்று சென்றார்; அதனான், நல்லாய்-நல்லாய்; நமக்கு உற்றது என்னென்று உரைக்கேன்-நமக்கு வந்ததனை
யாதென்று சொல்லுவேன்! எ-று.
என்னென் றுரைக்கேனென்றதனான்,
தொடுத்தது விடுப்பச் சென்றாராகலின் இன்பமென்பேனோ? அழற்கடஞ் சென்றமையாற் றுன்பமென் பேனோவெனப்
பொதுப்படக் கூறுவாள் போன்று, வரைவு காரணமாகப் பிரிந்தாராகலின் இது நமக்கின்பமே யென்றாற்றுவித்தாளாம்.
தொழார்களல்லார் செல்லா வென்று பாட மோதுவாருமுளர். மெய்ப்பாடு: அழுகை. பயன்: வரைவு நீட்டியாமை
யுணர்த்துதல்.
271
|