பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
493

18

வரை பொருட் பிரிதல்

18.27 வெறிவிலக்கல்

   
வெறிவிலக்கல் என்பது தலைமகளை ஐயந்தீர்த்து வெறிக் களத்தே சென்று, வேலனை நோக்கி, புனலிடைவீழ்ந்து கெடப் புக வந்தெடுத்துய்த்த கதிர்த்தோணிற்க, இந்நோய் தீர்த்தற்குப் பிறிதோருபாயத்தைக் கருது நின்னைப்போல, இவ்வுலகத்தின் கண் அறிவுடையாரில்லையென, மேலறத்தொடு நிற்பாளாகத் தோழி வெறி விலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்-

292. விதியுடை யாருண்க வேரி
        விலக்கலம் அம்பலத்துப்
    பதியுடை யான்பரங் குன்றினிற்
        பாய்புனல் யாமொழுகக்

______________________________________________________________

18.27.  அறத்தொடு நின்ற திறத்தினிற் பாங்கி
      வெறிவி லக்கிப் பிறிது ரைத்தது.


   
இதன் பொருள்: விதியுடையார் உண்க வேரி - இவ்வெறியாட்டு விழவின் வேரியுண்ண விதியுடையவர்கள் வேரியுண்ணவமையும்; விலக்கலம்-யாமதனைவிலக்கேம், அதுகிடக்க, அம்பலத்துப் பதி உடையான் பரங்குன்றினின் பாய் புனல் யாம் ஒழுக - அம்பலமாகிய விருப்பிடத்தையுடையானது பரங்குன்றி னிடத்துப் பரந்த புனலோடே யாமொழுக; கதி உடையான் கதிர்த் தோள் நிற்க - எடுத்தற்பொருட்டு ஆண்டுவரவையுடையவனாயவனுடைய ஒளியையுடைய தோள் கணிற்க; வேறு கருது நின்னின் மதி உடையார் - இந்நோய் தீர்த்தற்கு வேறோருபாயத்தைக் கருது நின்னைப் போல் அறிவுடையார்; தெய்வமே-தெய்வமே; வையகத்து இனி இல்லை கொல் - இவ்வுலகத்து இப்போழ் தில்லை போலும் எ-று.

   
இவ்வாறு கூறவே, நீ கூறியதென்னென்று கேட்ப அறத்தொடு நிற்பாளாவது பயன். அம்பலத்தென அத்துச்சாரியை அல்வழிக்கண் வந்தது. ஓரிடத்தா னொதுக்கப்படாமையிற் பதியுடையவனென்று சொல்லப்படாதவன் அம்பலத்தின்கண் வந்து பதியுடையனாயினா னென்பதுபட வுரைப்பினுமமையும். பாங்குன்றினினென்பதற்குப் ’பாலன் புகுந்திப் பரிசினி னிற்பித்த’ (தி.8 கோவை பா. 286) என்றதற் குரைத்ததுரைக்க. ஒழுக வென்னும் வினையெச்சம் கதியையுடையானென்னு மாக்கத்தையுட்கொண்ட வினைக்குறிப்புப் பெயரோடு முடியும். கதி - ஆண்டுச்சென்ற செலவு. கதிர்த் தோணிற்கவென்பதற்கு