பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
552

New Page 1

பொருள் வயிற் பிரிவு

    பொன்மாப் புரிசைப் பொழில்திருப்
        பூவணம் அன்னபொன்னே
    வன்மாக் களிற்றொடு சென்றனர்
        இன்றுநம் மன்னவரே.

338

24.8 இரவுறுதுயரத்திற்கிரங்கியுரைத்தல்

   
இரவுறுதுயரத்திற்கிரங்கியுரைத்தல் என்பது பிரிவு கேட்ட தலைமகளதாற்றாமுகங் கண்ட தோழி, இவ்வுறுப்புக்குறையோ டெங்குந் திரிந்திளைத்து, அருக்கனது தேர் வருதல் யாண்டை யது? இவளாற்றுதல் யாண்டையதென, அவளிரவுறு துயரத்திற்குத் தானிரக்கமுற்றுக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

339. ஆழியொன் றீரடி யும்மிலன்
        பாகன்முக் கட்டில்லையோன்
    ஊழியொன் றாதன நான்குமைம்
        பூதமும் ஆறொடுங்கும்

____________________________________________________________

யராய்ச் சென்றாரென்பதுபட நின்றதெனினு மமையும். ஊர்ந்தகளி றென்று ஒடு கருவிப் பொருட்கண் வந்ததெனினு மமையும். செல்வ ரென்னாது சென்றாரென்றமையான், சொல்லாது பிரிந்தானாம். மாவென்பது விலங்கென்று நாய்த்தலை யென்றுரைப்பாரு முளர். வாடுதற்கு - வாடுதலான். மெய்ப்பாடு: அழுகை. பயன்: பிரிவுணர்த்துதல்.

338

24.8.  அயில்தரு கண்ணியைப் பயில்தரு மிரவினுள்
      தாங்குவ தரிதெனப் பாங்கி பகர்ந்தது.

   
இதன் பொருள்: ஆழி ஒன்று - காலுள்ள தொன்று; பாகன் ஈரடியும் இலன் - பாகன் இரண்டடியுமுடையனல்லன், இவ்வுறுப்புக் குறையோடு; ஐம்பூதமும் ஆறு ஒடுங்கும் முக்கண் தில்லையோன் ஊழி ஒன்றாதன நான்கும் - ஐந்துபூதமுந் தோன்றியவாறொடுங்கும் மூன்றுகண்ணையுடைய தில்லையானுடைய ஊழியுமொவ்வாத பெருமையையுடைய நான்கியாமத்தின்கண்ணும்; ஏழ் இயன்ற ஆழ் கடலும் எண் திசையும் திரிந்து இளைத்து அன்றோ - ஏழாயியன்ற ஆழ்ந்த கடல்களையும் எட்டுத்திசைகளையுந் திரிந்திளைத்தன்றோ; அருக்கன் பெருந்தேர் வந்து வைகுவது - அருக்கனது பெருந்தேர் ஈண்டுவந்து தங்குவது; அதனான் அதன் வரவு யாண்டையது!