பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
57

New Page 1

உரைமாட்சி

சொற்பொருள் : 

பாடலுட் பயிலும் அரிய சொற்களுக்குப் பொருள் கூறுவதில் இவ்வுரையாசிரியரின் நுண்ணறிவு புலப்படுகிறது. சான்றாகச் சில.

படிச்சந்தம் 78 - ஒன்றன் வடிவை உடைத்தாய் அது என்றே கருதப்படும் இயல்புடையது. சிலம்பு 99 - வெற்பின் ஒரு பக்கத்து உளதாகிய சிறுகுவடு. அழைப்பு 102 - பொருள் புணரா ஓசை. குதலைமை 104 - விளங்காமை. மழமை 104 - இளஞ்சொல். கூடம் 129 - மன்றாகமரத்திரளால் செய்யப்பட்ட தேவகோட்டம். இருவி 144 - கதிர் கொய்த தட்டை. தாள் 144 - கதிர் கொய்யாத முன்னும் சொல்வதொருபெயர். இசும்பு 149 - வழுக்குதல், ஏற்றிழிவு முதலாயின குற்றம். செறு 166 - நீர் நிலை. சோத்தம் 173 - இழிந்தார் செய்யும் அஞ்சலி, செறிவு 179 - எல்லைகடவா நிலைமை. கொழுமீன் 188 - மீன்களுள் ஒரு சாதி. சுத்தி 242-பிறர்க்குத் திருநீறு கொடுத்தற்கு இப்பிவடிவாகத் தலையோட்டால் அமைக்கப்படுவதொன்று செல்வு 266 - இரு முதுகுரவரால் கொண்டாடப்படுதல், நீதி 266 -உள்ளப்பொருத்தம் உள் வழி மறாது கொடுத்தல். மாத்து 373 - தலைமகற்கு உரியளாகி நிற்றலான் உண்டாகிய வரிசை.

சொற்றொடர்ப் பொருள் :

சில சொற்றொடர்களுக்குப் பேராசிரியர் வரைந்துள்ள பொருள் நுட்பம் எண்ணியெண்ணி வியத்தற்குரியதாகும். அவற்றுள் சில.

அவயவம் கண்டு 10 - அவயவங்களின் உறுதல் முதலிய நான்கையும் கண்டு. தையல் பாங்கி 60 - புனையப்படுதலையுடைய பாங்கி. இன்புறுதோழி 66 - இருவர் காதலையும் கண்டு இன்புறும் தோழி ; ஐயம் நீங்கித் தெளிதலான் இன்புறும்  தோழி ; தலைவி நலத்திற்கேற்ற நலத்தையுடைய தலைமகனைக் கண்டு இன்புறும் தோழி. மெய்த்தகை 231 - மெய்யாகிய கற்பு; புனையா அழகுமாம். வண்புகழ் 298 - அறத்தொடுநின்று கற்புக் காத்தலான் வந்த புகழ். ஊரனோடு இருந்து வாடியது 354 - ஊரன் குறைகளை நினைந்து அதனோடு இருந்து வாடியது.

வடசொல் முதலியன :

உரையாசிரியர் திருக்கோவையாரில் பயின்றுள்ள வடசொல், பாகதச்சொல், வடநூல் முடிவு போன்றவற்றை எடுத்துக் காட்டியுள்ளவற்றில் கீழ்க்காண்பன சில.

தேயம் 39 - வடமொழித்திரிபு. அளிகுலம் 45 - வடமொழிமுடிபு. கண்ணன் 53 - கரியோன் என்னும் பொருளதோர்பாகதச் சிதைவு. படிச்சந்தம் 78 - பிரதிசந்தம் என்றும் வடமொழிச்