25
பரத்தையிற்
பிரிவு
25.6 வாரம்பகர்ந்துவாயின்மறுத்துரைத்தல்
வாரம் பகர்ந்து வாயின் மறுத்துரைத்தல்
என்பது விளக்கொடு வெறுத்து வருந்தாநின்ற தலைமகள், தலைமகன் பரத்தையிற் பிரிந்துவந்து
வாயிற்கணிற்ப, வண்டோரனையர் ஆடவர், பூவோரனையர் மகளிராதலான், நாமும் அவன்றலையளிபெற்ற
பொழுது ஏற்றுக்கொள்வதன்றோ நமக்குக் காரியம்; நாம் அவனோடு புலக்கற்பாலேமல்லேமென்று
வாயினேர்வி்த்தார்க்கு, ஊரனுடைய மாலையுந் தோளும் அவ்விடத்து வளைத்து வைத்து வேண்டினார்
கொள்ள வமையும்; யான் மன்னனைப் பரத்தையர்க்கு உறாவரை யாகக் கொடுத்தேனென மறுத்துக் கூறாநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
357. பூங்குவ ளைப்பொலி
மாலையும்
ஊரன்பொற் றோளிணையும்
ஆங்கு வளைத்துவைத் தாரேனுங்
கொள்கநள் ளார் அரணந்
____________________________________________________________
மறைத்தலெனினுமமையும். நெய்ம்முகம்
- சுடரையணைந்த விடம். நெய்ம்முகமாந்தி யிருண்முகங்கீழு நெடுஞ்சுடரே என்றது உணவாகிய நெய்யை
மாந்தி மேனியொளியை யுடையையாய்ப் பகைசெகுக்கும் பெருமையை யுடையையாதலின் அக்களிப்பினாற்
கண்டது கூறிற்றிலை என்றவாறு. இவை யிரண்டற்கும் மெய்ப்பாடும், பயனும் அவை.
356
25.6. வார்புன லூரன் ஏர்திகழ்
தோள்வயிற்
கார்புரை குழலி வாரம் பகர்ந்தது.
இதன் பொருள்: பூங்
குவளைப் பொலி மாலையும் - பொலிவையுடைய குவளைப் பூவானியன்ற பெரியமாலையையும்; ஊரன் பொன் தோள்
இணையும் - ஊரனுடைய பொன்போலுந் தோளிணையையும்; ஆங்கு வளைத்து வைத்து ஆரேனும் கொள்க - தம்மில்லத்து
வளைத்துவைத்து வேண்டியார் கொள்வாராக; நள்ளார் அரணம் தீங்கு வளைத்த வில்லோன் தில்லை -
பகைவரதரணந் தீங்கெய்த வளைக்கப்பட்ட வில்லையுடையவனது தில்லையின்; சிற்றம்பலத்து அயல்வாய்
ஓங்கு வளைக் கரத்தார்க்கு -சிற்றம்பலத்துக் கயலாகியவிடத்துவாழும் உயர்ந்த வளையையுடைய கையை
|