பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
648

அருஞ்சொற்பொருள் அகராதி

       

பாட்டு எண்

  நுழைவேல் மலரா வரும் - புண்ணின்கண்நுழையும் கொடியவாய் வரும் 

25

  நூக்கும் - தள்ளும், அசைக்கும் 161
  நூபுரம் - சிலம்பு 246
 

நெ

     
  நெக்கு - நெகிழ்ந்து 192
  நெருங்க - அடர்ப்புண்ண 121
  நெருப்பினம் - இடிநெருப்பு 319
 

நே

     
  நேயத்தது - உள்ள நெகிழ்ச்சியுடையது 39
  நேர்கழி - ஒத்தகழி 6
 

நொ

     
  நொடிவார் - சொல்லுவார் 139
 

     
  பகடு - யானை 237
  பகல் - ஆதித்தன் 4
  பகன் - பகன் என்னும் பெயருடைய ஆதித்தன் 184
  பங்கம் - பங்கு - கூறு 90
  பசுமை - குளிர்மை, செவ்வி 149
  படிச்சந்தம் - ஒப்பு 32
      பிரதிச்சந்தம் என்னும் வடமொழிச் சிதைவு,ஒன்றன் வடிவையுடைத்தாய் அதுவென்றே கருதப்படும் இயல்பையுடையது 78
  படிறர் - வஞ்சகர் 87
  படுதல் - விரவுதல் 348
  பண்ணை - விளையாட்டு 30
         வயல் 219
  பணி - பாம்பு 2
  பணை - மருதம் 11
          பெரிய 111
  பணைத்தல் - ஒளியுறுதல்,ஒடுங்காமை, பெருத்தல் 242
  பதி - தலைமகன் 147
    இருப்பிடம் 292
  பதைக்கும் - நடுங்கும் 233
  பந்தி - நிரை 99
  பயங்கரம் - பயத்தைச் செய்வன 33
  பயலன் - கூற்றையுடையான் 240
  பயிர்ப்பு - பயிலாத பொருட்கண் வந்த அருவருப்பு 12
  பயில் - பயிற்சி 224
  பயில - நெருங்க 30
  பயிலுதல் - நெருங்குதல் 359
  பயோதரம் - முலை 130
  பரம் - அளவு 321
  பரற்று - பரலையுடைத்து 206
  பரன் - எல்லாப் பொருட்கும் அப்பாலாயவன் 99
  பாரகம் - பொடி 194
  பரிக்கல் - சுமத்தல் 164
  பரிசகம் - சித்திரசாலை 78
  பருவரல் - வருத்தம் 13
  பலம் - பயன் 346
  பழனம் - திருப்பழனம் என்னும் திருத்தலம் 4
  பழியாம் - அலருண்டாம் 261
  பற்று - பற்றுக்கோடு 276
  பறல் - பறத்தல்(இடைக்குறை) 375
  பன்னுதல் - ஆராய்ந்து செய்தல் 122
  பனித்துண்டம் - பிறை 132