பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
75

ஆராய்ச்சியுரை

பின்வருமாறு (1) சற்குரு தரிசனம், (2) ஆன்மபோத தரிசனம், (3) அன்பால் ஆனந்தம் பெற்று அநுபவித்தல் (4) அருள் சிவங்கலந்து உயிர் தரிசனம் செய்தல் (5) சிவமுயிர் விரவியதருளே தேறல் (6) சிவமுயிர் கூட அருள் வினாவுதல் (7) சிவமுயிர் கலத்தல் அருள் பணியாற் காண்டல் (8) அருள் உயிர்ப் பக்குவம் அறிந்து வியத்தல் (9) சிவமே கருணை என்று அருள் நோக்கல் (10) உயிர் இன்புறவே அருளோடு உரைத்தல் (11) உயிர்ப்பறிவின்புக் கருள் புகன்றிடுதல் (12) கிடையாவின்பத் தருமை காட்டல் (13) இயற்கை போல் சிவத்தொடு இயல் உறக் கூட்டல் (14) அருளே சிவத்தோடாக்கியவ்வருமை தெரியக் கருணை பலவும் எடுத்துக் காட்டல் (15) சிவனது கருணையருள் தெரிவித்தல் (16) அருள் உயிர்க்கு அருமை அறிய உரைத்தலும் ஆனந்தத்திடை அழுந்துவித்தலும் (17) சிவனது கருணை தெரிய உரைத்தவ் இன்பம் பெற அருள் எடுத்தியம்பியது (18) கருணை அருள் திரோதை பரையின் புணர்தல் (19) உயிர் சிவமணம் பெற்றுண்மையாதல் (20) இது ஓதற்பிரிவு எனவும்படும் - பூரண இன்பத் திறம் பாராட்டல் (21) இன்பத் திறத்தை எங்குங்காண்டல் (22) இது பகை தனி வினைப் பிரிவு எனவும் படும், இன்பகனமன்றி வேறிலை உலகு என்றல் (23) இது வேந்தற்குற்றுழி பிரிவு எனவும் படும் (24); தானதுவது தானாகுந் தன்மை (25) அறிவு பூரணமாகி இன்பாதல்.

திருக்கோவையாரை அறிய விரும்புவோர் தாண்டவராயர் உரையை நன்கு பயிலல் வேண்டும். 400 பாடல்களுக்கும் சைவ சித்தாந்த ரீதியாக அவர் குறிப்புரை தந்திருக்கிறார்5.

திருவாவடுதுறை ஆதீன குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக மூர்த்திகள் ஆக்ஞையின்படி திரிசொற்பொருள் விளக்கத்துடன் சார்வரி ஆண்டு ஆவணி மாதம் (1900) திருமயிலை செந்தில்வேலு முதலியார் அவர்கள், திருவாசகம்-திருக்கோவையார் முதலிய நான்கு திருமுறைகளை ஒரு புத்தகமாக வெளியிட்டார். இது சென்னை, கலாரத்நாகரம் என்னும் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலில் சில வண்ணப் படங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

1917ஆம் ஆண்டு வெள்ளையர் நிறுவனமாகிய லாங்மென்ஸ் க்ரீன் ஆண்டு கம்பெனியார் (சென்னை) திருக்கோவையாரை மிக


    5திருவாசக அநுபூதி உரை என்னும் திருவாசக வியாக்கியானம், முதற்பகுதி (1954), டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம், சென்னை, 154-212.