பக்கம் எண் :

158கல்லாடம்[செய்யுள்18]



30
  வில்லுறை கல்லின் வெண்மலர் பரப்பி
யிலவலர் வாட்டிய செங்கால் பிடித்துக்
களிதுங் குளத்தொடு மெல்லெனச் சேர்த்தி
யிரண்டு பெயர்காத்த தோலாக் கற்பு
முகனுறக் காணுங் கரியோர் போல
35
  விடப்பா னிறுத்திப் பக்கஞ் சூழ
வடமீன் காட்டி விளக்கணி யெடுத்துக்
குலவாழ்த்து விம்ம மணவணிப் பக்கங்
கட்புலங் கொண்ட விப்பணி யளவும்
வாடிநிலை நின்று மூடியே மாந்து
40
  மென்முக மளக்குங் காலக் குறியைத்
தாமரைக் கண்ணா லுட்புக வறிந்து
முலக மூன்றும் பெறுதற் கரியதென்
றெண்ணா வாய்மை யெண்ணிக் கூறியுங்
கல்லுயர் நெடுந்தோ ளண்ணன்
    மல்லுறத் தந்த வீர்ந்தழை தானே.

(உரை)
கைகோள்: கற்பு. தோழிக்கூற்று.

துறை: மகிழ்ந்துரைத்தல்.

     (இ-ம்.) இதற்கு “பெறற்கரும் பெரும் பொருள் முடிந்தபின் வந்த தெறற்கருமரபிற் சிறப்பின் கண்ணும்” (தொல். கற்பு. 9) எனவரும் விதி கொள்க.

35-41: வாடி...............................தானே

     (இ-ள்) கல் உயர் நெடுந்தோள் அண்ணல்-மலையினுங் காட்டில் உயர்ந்த நெடிய தோளையுடைய நம்பெருமான்; வாடி நிலை நின்றும்-இவள் உடன்படுவளோ படாளோ என்னும் ஐயத்தால் வாட்டமெய்தி யான் சேட்படுத்துந்தொறும் நீங்கானாய் அந்நிலையிலே நின்றும்; ஊடி ஏமாந்தும்-ஆற்றாத தன் நெஞ்சினோடு பிணங்கிக் கலங்கியும், தாமரைக் கண்ணால் என்முகம் அளக்குங்கால்-தன்னுடைய செந்தாமரை மலர் போன்ற கண்களாலே என் முகத்தை நோக்கி மதியுடம்படுத்தற்கு அலவளாவும் பொழுது; அக்குறியை உட்புக அறிந்து-என் கருத்தினைத் தன் நெஞ்சத்திற் புகுமாறு தெளிந்தும்; உலக மூன்றும் பெறுதற்கு அரியது என்று-இத்தழை மூன்