|
பக்கம் இக் கண்புலங்கொண்ட-திருமண
அணியாகிய தாலியினை எம்பெருமான் எம்பெருமாட்டியின் கழுத்திலே பூட்டும் பகுதியாகிய
காட்சியினை என்னுடைய இக்கண்கள் கொண்ட; பணி அளவும்-சடங்கு வரையில் என்க.
(வி-ம்.) விளக்கு-மங்கலப்
பொருள்களுள் ஒன்று. திருமனச் சடங்கில் குலமகளிர் விளக்கு முதலியன ஏந்தி வாழ்த்துதலை,
| |
விரையினர் மலரினர்
விளங்கு மேனியர்
உரையினர் பாட்டின ரொசிந்த நோக்கினர்
சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
ஏந்திள முலையின ரிடித்த சுண்ணத்தார்
விளக்கினர் கலத்தினர் விரிந்த பாலிகை
முளைக்குட நிரையினர் முகிழ்ந்த மூரலர்
போதொடு விரிகூந்தற் பொலனறுங் கொடியன்னார்
காதலற் பிரியாமற் கவுக்கை ஞெகிழாமல்
தீதறு கெனவேத்தி. (சிலப்.
1. 54. 64) |
1-4:
குங்கும.........................நித்தின்
(இ-ள்) குங்குமக்கோட்டு
உணங்கு அலர்கடுக்கும் பங்கு உடைச் செங்கால் பாட்டுஅளி-குங்கும மரத்தினது கொம்பின்கண்
வாடிய மலரை ஒக்கும் வளைவினையுடைய சிவந்த காலினையும் இசையினையும் உடைய வண்டினது;
அரிபிடர் குருவில் தோய்ந்த அரிகெழு மரகதம்-அரிந்தாற் போன்ற பிடரின்கண் அமைந்த
நிறமும் ஒலியும் பொருந்திய அழகுடைய மரகத மலையானது; கல் என கிடப்பச் சொல்லிய
மேனி திருநெடுமாலுக்கு-ஒரு கல்லே என்று இகழ்ந்து சொல்லும்படி தாழ்ந்து கிடப்ப அதனினும்
சிறந்ததாகச் சொல்லப்பட்ட திருமேனியையுடைய நெடிய திருமாலுக்கு; ஒருவிசை-ஒருமுறை; புரிந்து
சோதி வளர்பாகம் ஈந்து அருள் நித்தன்-ஒளி வருதற்கிடமான தனது வலப்பாகத்தை வழங்கியருளிய
அழிவரவனும் என்க.
(வி-ம்.) வண்டின்
கால்களுக்கு வாடிய குங்குமப்பூ உவமை. உணங்கலர்-வாடியபூ. பங்கு-வளைவு. அளி-வண்டு. அரிபிடர்-அரிந்தாற்போன்ற
பிடர். குரு-நிறம். வில்-ஒளி. குருவும் வில்லும் எனல் வேண்டிய எண்ணும்மைகள் தொக்கன.
அரிகெழு என்புழி அரி-நிறம். மரகதம்-மரகத மலை. மரகத மலையானது எங்ஙனமிருப்பினும்
ஒரு கல்லே யாதலின் திருமால் திருமேனிக்கு உவமையாகாது எனக் கூறப்பட்ட திருமால் திருமேனி
என்க. தனக்குரிய பாகம் அதுவாகலின் வலப்பாகத்தைச் சோதிவளர் பாகம் என்று குறித்தார்.
இதன்கண் குங்குமப்பூ வண்டின் கால்களுக்குவமையாக வண்டின் பிடரினது நிறமும் ஒளியுமே மரகத
மலைக்கு உவமையாகும். இனி அம்மரகதமலையும் திருமேனிக்கு உவமை யாகாதென விலக்கலின்
இது அடுக்கிய தோற்றம் அன்மை உணர்க. நித்தன்-அழிவற்றவன்.
|