இடப்பக்கத்தே கொண்டு
எல்லாருங் காணும்படி அம்பலத்தின்கண் நின்ற பொருந்தாத ஒழுக்கத்தை யுடையவனது; வடவான்
கயிலைப் போதி இடங்கொண்ட பொன் வேங்கை-வடதிசைக் கண்ணதாகிய கயிலை மலைக்கண்
உளதாகிய பொருப்பிடங் கொண்ட பொன் போலும் மலரையுடைய வேங்கைமரம்; தினைப்புனம்
கொய்க என்று-நீவீர் நுங்கள் தினைப்புனங்களில் கதிர்கலைக் கொய்து கொள்வீராக
என்று; தாது இடம்கொண்டு-பூந்தாதினைத் தன்னிடத்தே கொண்டு; பொன் வீசி-பொன் போலும்
மலரையெல்லாம் வழங்கி; தன் வாய் கள் சொரிய நின்று-தன் வாயின்கண் கள் சொரியும்படி
நின்று; இது சோதிடங் கொண்டு எம்மைக் கெடுவித்து-இவ்வேங்கை சோதிடம் சொல்லுதலைப்
பொருந்தி எம்மைக் கெடுத்தது. இனி யாம் என்செய்கோம் என்க.
(வி-ம்.) மாது: உமையம்மையார்.
மாதை இடத்தே கொண்டு அம்பலத்தே நிற்றல் பொருந்தா ஒழுக்கம் ஆதலின் பொருந்தா
ஒழுக்கத்தையுடையவனது என்று உரைவிரித்தார் உரையாசிரியர். இங்ஙனம் கூறியது இவ்வொழுக்கத்தையுடையவனது
மலைக்கண் உளதாகலின் வேங்கை மரமும் பிறர்கேடு சுழ்தலாகிய பொருந்தா ஒழுக்கத்தை
உடையதாயிற்று என்றற்குக் குறிப்பேதுவாம் பொருட்டு என்று கருதி இங்ஙனம் நுண்ணிதின்
உரை கூறினார். போதி இடங்கொண்ட எனும் சொற்களில் நிலைமொழி ஈற்றுயிர் கெட்டுப்
போதிடங்கொண்ட எனப் புணர்ந்து நின்றன; கெடுதல் விகாரம். போதி-மலை. கயிலையின்
பக்கமலையின்கண் இடங்கொண்ட வேங்கை என்க. இனி, போது இடங்கொண்ட வேங்கை எனக்
கண்ணழித்து மலரைத் தன்பாற்கொண்ட வேங்கை எனப் பொருள் கோடலுமாம். உரையாசிரியர்
போதி என்றே பாடங்கொண்டாரென்பது பொருப்பிடங் கொண்ட என்னும் அவருரையால் உணரலாம்.
பொன் வேங்கை-பொன்போலு மலரையுடைய வேங்கை என்க. தாது-மகரந்தம். கள்-தேங் பொன்னைக்
கொடுத்துப் பிறர்க்கடிமை யாதலைப் பொருந்தித் தானிழந்த சாதியாதலால் தனக்குரிய
கள்ளை வாய் சொரிய நின்று சொதிடம் சொல்லி என்றும் சிலேடை வகையால் இழித்துக்
கூறினாளாகவு முரைக்க. சோதிடங் கொள்ளலாவது சோதிடம் சொல்லுதலைப் பொருத்துதல்.
கானவர் வேங்கை மலர்தல் கண்டு தினை அரியும் பருவமென்றுணர்ந்து அரிவாராகலின் அதனைத்
தற்குறிப்பேற்றமாகத் தோழி இங்ஙனம் கூறுகின்றாள். தினை அரியப்படின் தாம் இல்லிற்குப்
போக நேர்தலின் தலைவனைக் காண்டல் அரிதாம் என்பது கருதி வேங்கை எம்மைக் கெடுத்தது
என்றாள். தூமொழி: அன்மொழித்தொகை. இனிச் சோதிடங் கொண்டி தெம்மைக் கெடக்
கொண்டது என்றும் பாடம். இதற்கு கெடக் கொண்டதென்னும் சொற்றொடரை ஒரு சொன்னீர்மைத்தாய்க்
கொண்டு கெடுத்தது என்றே பொருள் கூறுக. மெய்ப்பாடு-அழுகை. பயன்-இற்செறிப்பறிவுறுத்தி
வரைவுகடாதல்.
|