28-35: அவ்வுழியே......................காண்
(இ-ள்)
அவ்வுழியே - அப்பொழுதே; உலகு இருள் துரக்கும் செஞ்சுடர் வெண்சுடர் பிரமன் உள்பட்ட
நில உயிர் அனைத்தும் - உலகின்கண் பரந்த இளை அகற்றும் ஞாயிறும் திங்களும் பிரமன்
முதலிய நிலைபேறுடைய உயிர் இனங்கள் எல்லாம் ; தமக்கு எனக் காட்டும் ஒளிக்கண் கெடலும்
- தத்தமக்காகத் தனித்தனியே பொருள்களைக் காட்டும் ஒளியையுடைய கண் மழுங்கிப்போதலும்;
அவர் மயங்கங் கண்டு - தேவர் முதலிய அவர்களின் மயக்கத்தை அறிந்து; அவர் கண்பெற
- அவர்களெல்லாம் மீண்டும் கண்ணொளியைப் பெறும்படி; திருநுதல் கிழித்த தனி விழி
நாயகன் - அழகிய நெற்றியினிடத்தே திறக்கப்பட்ட ஒப்பற்ற நெருப்புக்கண்ணையுடைய
இறைவனாகிய சோமசுந்தரக்கடவுளால்; தாங்கிய கூடல் பெருநகர் இது ஈங்கு காண்க - பாதுகாத்தருளப்
பட்ட பெரிய நகரம் இஃதாகும் இவ்விடத்தே அதனைக் கண்டு மகிழ்க என்க.
(வி-ம்.)
செஞ்சுடர் - ஞாயிறு வெண்சுடர் - திங்கள், காட்டும் - உலகப் பொருள்களைக் காட்டா
நின்ற, அவர் - ஞாயிறு முதலியோர், மயங்குதல்- குருட்டுத்தன்மையால் அறிவுமயக்கங்
கொள்ளுதல், நுதல்கிழித்த விழி தனிவிழி எனத் தனித்தனி கூட்டுக. நுதலைக் கிழித்துத்
தோற்றுவித்த விழி என்க. மதுரைமாநகர் இதனை ஈங்குக் காண்க என்க.
இதனை
நகைக்கொடியே பொடி பொறுத்தியங்கினை ; மலர்கால் பொருந்துக. புலிக் கொதுங்கினை;
ஈண்டு உழவக்கணத்தர் உடைவது நோக்குக கொலைஞர். தேர்க்கணங்கினை ஈண்டு வையம்போவது
காண்க. எயினர், அமர்க்கலிக்கு அழுங்கினை ; ஈண்டுத் தரளக்குவால் இவை காண்க. நீ
பேய்த்தேர் புனல் எனக் காட்டினை ; ஈண்டுக் கடல் காண்க. துடி ஒலி ஏற்றனை ; ஈண்டு
மறை ஒலிகேள். இது கூடற்பெரு நகர் ; இதனை ஈங்குக் காண்க. என வினைமுடிவுசெய்க. மெய்ப்பாடும்
பயனும் அவை.
|