பக்கம் எண் :

562
 
2282.வாயானை மனத்தானை மனத்துள் நின்ற

கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்

தூயானைத் தூவெள்ளை யேற்றான் தன்னைச்

சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென்

தாயானைத் தவமாய தன்மை யானைத்

தலையாய தேவாதி தேவர்க் கென்றும்

சேயானைத் தென்கூடல் திருவா லவாய்ச்

சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

8


அகற்றியருளுதல் உணர்த்துவார், "துன்பந் துடைத்தருள வல்லான்" என்றும் அருளிச்செய்தார். எல்லி-இரவு. திரிபுரத்து அசுரர்கள், முன்பு சிவபிரானை வழிபட்டிருந்து, பின்னர் புத்தனது போதனையால் அதனை விட்டொழித்தாராதலின், அவர்களை, 'மறந்தார்' எனக் குறித்தருளினார். சிறந்தான் - தாங்கிநிற்கும் தலைவன். 'மற்றொரு பற்றில்லா அடியேற்கு' என எடுத்தோதியருளியது, ஏனையோர்க்கும் அஃது இன்றியமையாததாதல் உணர்த்துதற்கு; இதனை, "மற்றுப் பற்றெனக்கின்றி நின்றிருப் பாதமேமனம் பாவித்தேன்" (தி.7. ப.48. பா.1.) என வன்றொண்டப் பெருமான் வலியுறுத்தருளியது காண்க. 'அடியார்க்கு' என்பதும் பாடம்.

8. பொ-ரை: அடியார்களுடைய வாயுள்ளும் மனத்துள்ளும் மனத்தில் தோன்றும் எண்ணத்துள்ளும் தங்கி, அவர்களுடைய விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுபவனாய், மாசற்றவனாய், கலப்பற்ற வெள்ளை நிறக் காளையை உடையவனாய், பிறையைச்சடையில் சூடியவனாய், தொடர்ந்து எனக்குத் தாய்போல உதவுபவனாய்த் தவத்தின் பயனாக உள்ளவனாய், மேம்பட்ட தேவர்கள் தலைவராய திருமால் பிரமன் இந்திரன் முதலியவர்களுக்கு என்றும் சேய்மையிலுள்ளவனாய் இருக்கும்தென் கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

கு-ரை: வாயான், மனத்தான், என்பன இறைவன், சொல்லுதற்கும், நினைத்தற்கும் உரிய கருவிகளாகிய அவற்றிற் கலந்து நின்று தொழிற்படுத்துதலைக் குறித்தன. 'கருத்தான்' என்றது மனத்தின் தொழிற்பாடாகிய எண்ணத்தில், அவன் கலந்துநிற்றலை உணர்த்திற்று. 'கருத்து' என்றது, விருப்பத்தையே. அதனை அறிந்து முடித்தலாவது, வேண்டுவார் வேண்டுவனவற்றை அவர்தம் முயற்சியின்வழிக் கூட்டுவித்தல். கருதப்பட்டதே சொல்லப்படுதலின்,