| சம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடல் பெற்றது. கிழக்குக் கோபுரம் ராஜகோபுரம். ஐந்து நிலைகளையுடையது. வெளியில் பதினாறு கால் மண்டபம் உள்ளது. இக்கோபுரம் புதுப்பிக்கப்பட்டு 12-2-1984-ல் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. கோபுரத்தில் உள்ள சிற்பங்களுள் சம்பந்தரின் சிவிகையை அப்பர் தாங்குவது, ஊர்த்துவ தாண்டவம், தில்லைக்காளி, கஜசம்ஹாரமூர்த்தி முதலியவை குறிப்பிடத் தக்கவை. கோபுரவாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே வள்ளி தெய்வயானையுடன் கூடிய சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. முகப்பில் கமல விநாயகர் தரிசனம். பக்கத்தில் அழகிய ‘விஜயகணபதி’ ஆலயம் உள்ளது ; இக்கோயிலின் மேற்புற வரிசையில் சோடச கணபதி உருவங்கள் காட்சியளிக்கின்றன. இக்கோயில் கும்பாபிஷேகம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களால் 17-3- 985-ல் நிகழ்த்தப் பெற்றது. வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது - தெற்கு நோக்கியது. முன் மண்டபத்தில், வாயிலையொட்டி ; இக்கோயிலில் (1) பிரதோஷ உற்சவம் (2) முருகனுக்கு விழா (3) துவஜாரோகண விழா (4) வன்மீக நடன உற்சவம் ஆகியவைகளை நடத்துவதற்காக எழுதி வைத்துள்ள நிபந்தக் கல்வெட்டுக்கள் உள்ளன. அம்பாள் நின்ற திருக்கோலம். உள்ளே வலம் வரலாம். பள்ளியறை உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களில்லை. சுக்கிரவார அம்மன் திருமேனி தனியே உள்ளது. கருவறையில் வெளிப் பகுதியில் நிரம்பக் கல்வெட்டுக்கள் உள்ளன. பிராகாரக் கல்தூண்களில் நர்த்தன விநாயகர், ரிஷபாரூடர் சிற்பங்கள் உள்ளன. வெளிப் பிராகாரத்தில் வலமாக வரும்போது ; நான்குகால் மண்டபம் உள்ளது. அடுத்து, சற்றுத் தள்ளி இடப்பால் விநாயகர் சந்நிதி மூன்று மூலத் திருமேனிகளுடன் காட்சி தருகிறது. வலப்பால் தியாகராஜா சபா மண்டபம் உள்ளது. மண்டபம் பெரியது. தியாகராஜா சந்நிதி கிழக்கு நோக்கியது. அழகான திருமேனி. தரிசித்துத் தெற்குப் பக்கவாயில் வழியாக உள் சென்றால் நேரே அம்பலவாணர் தரிசனம், மாணிக்கவாசகர் சிவகாமி உருவத் திருமேனிகள் உள்ளன. அம்பலவாணர் உருவம் அழகானது. வன்மீகநாதர் கோயிலுக்குரிய சிறிய நடராஜ உருவம் பாதுகாப்புக்காக இச்சந்நிதியில் வைக்கப்பட்டுள்ளது. வலமாக வரும்போது அறுபத்து மூவர் சந்நிதிகள், |