சடையப்ப வள்ளலின் இல்லம் வடக்கு வீதியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. கல்வெட்டில் இறைவன் பெயர் ‘திருவருட்டுறை ஆழ்வார்’, ‘திருவெண்ணெய்நல்லூர் உடையார்’, ‘தடுத்தாட்கொண்ட தேவர்’ என்றெல்லாம் குறிக்கப்பட்டுள்ளது. “பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை வைத்தாய் பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அத்தா உனக்கு ஆளாய் இனிஅல்லேன் எனலாமே” “காரூர் புனல் எய்திக்கரை கல்லித் திரைக்கையால் பாரூர் புகழ் எய்தித் திகழ் பன்மாமணி யுந்திச் சீரூர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள் ஆரூரன் எம் பெருமாற்காளல்லேன் எனலாமே.” (சுந்தரர்) (இப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ‘உனக்கு முன்பே ஆளாகிய யான் இப்போது அதனை இல்லையென்று கூறுதல் பொருந்துமோ’ என்னும் பொருள்படுமாறு ‘அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே’ என்று பாடியுள்ளார்.) மெய்கண்டதேவர் துதி : ‘பண்டைமறை வண்டரற்றப் பசுந்தேன் ஞானம் பரிந்தொழுகச் சிவகந்தம் பரந்து நாறக் கண்ட இருதய கமல முகைகளெல்லாம் கண் திறப்பக் காசினிமேல் வந்த அருட்கதிரோன் விண்டமலர்ப் பொழில்புடைசூழ் வெண்ணெய் மேவும் மெய்கண்ட தேவன்மிகு சைவநாதன் புண்டரிக மலர்தாழச் சிரத்தே வாழும் பொற்பாதம் எப்போதும் போற்றல் செய்வாம்.” (அருணந்தி சிவாசாரியார்) பொய்கண் டகன்ற அம்மையப்பர் புகழ்சேர் மைந்தன் தனைவேண்டிப் புகலிக் குழந்தை திருமுறையிற் போற்றிக் கயிறு தனைச் சாற்றிக் கைகொண் டவர்கள் தொழுதேவெண் காட்டின் திருப்பாட் டெடுத்துள்ளங் |