பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 209


நடைபெறுகிறது. அது தவிர, ஆடிப்பூரம், நவராத்திரி, சிவராத்திரி, சஷ்டி,
நடராசர் அபிஷேகங்கள் முதலியவைகளும் சிறப்பாக நடைபெறுகின்றன.
நாடொறும் நான்கு கால பூசைகள்.

     சோழ, பாண்டிய, விஜயநகரமன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்களில்
இறைவன் பெயர் ‘உதவிநாயகர்’, ‘உதவி மாணிகுழி மகாதேவர்’ என்று
குறிக்கப்படுகின்றது.

     அருணகிரிநாதரின் திருப்புகழ் இத்தலத்திற்கு உள்ளது. இத்தலத்திற்குப்
பக்கத்தில் உள்ள திருமுறைத் தலங்கள் திருவதிகை, திருப்பாதிரிப்புலியூ
ராகும். திருவகீந்திபுரம் சிறந்த வைணவத்தலம். இங்கிருந்து 4 கி.மீ.
தொலைவிலுள்ளது.

     “மந்தமலர்கொண்டு வழிபாடுசெயு மாணியுயிர் வவ்வமனமாய்
      வந்த ஒருகாலனுயிர்மாள உதைசெய்த மணிகண்டன் இடமாம்
      சந்தினொடு காரகில் சுமந்து தடமாமலர்கள் கொண்டு கெடிலம்
      உந்து புனல்வந்து வயல்பாயு மணமாருதவி மாணிகுழியே.”
                                              (சம்பந்தர்)

தலபுராணப் பாடல்கள்
செல்வ விநாயகர் துதி

     “மணிகொண்ட கிம்புரிக்கோட்டு ஐங்கரம் நால்
           வாய்மும்மை மதம் வாய்ந்தோங்கும்
      கணிகொண்ட கூவிளமும் நறைஇதழிப்
           பூந்தொடையும் கலந்து சூடிப்
      பணிகொண்டவ் வுயிர்களையும் இகபரம் வீடு
           இவையுதவிப் பாரின் மீதே
     அணிகொண்ட வாமனவூர்ச் செல்வ விநா
           யகன் திருத்தாள் அகத்துள்வைப்பாம்”

உதவிநாயகர் துதி

 “சீர்பூத்த நீலகிரி திருமாணிக்குழிவளரும் தெய்வக்கோயில்
  வார்பூத்த களபமுலை மோகினிமா தினைத்தடந்தோள் மகிழப் புல்லும்
  கார்பூத்த கந்தரமுக் கண்ணான் காந்திங்கட் கங்கைவேணி
  ஏர்பூத்த வாமனே சுரனுதவி நாயகனை ஏத்தி வாழ்வோம்.”

தலம் - 14