பக்கம் எண் :

222 திருமுறைத்தலங்கள்


நவகன்னியர் உளர். அறுபத்து மூவர் சிலாரூபங்கள் முழுவதுமாக இல்லை -
ஒரு சிலவே உள்ளன.

     விநாயகர், பூசை செய்யும் அமைப்பில் கையில் மலருடன் சந்நிதியில்
காட்சி தருகிறார். அடுத்துப் பழைய ஆறுமுக மூர்த்தி மட்டுமே உள்ளார் -
சந்நிதியமைப்பில்லை. பக்கத்தில் கஜலட்சுமி சந்நிதி உளது. கோமுகத்தின்
கீழ் அதை ஒரு பூதம் தாங்குவது போலவுள்ள அமைப்பு காணத்தக்கது.
மூலவர் வாயிலில் இருபுறங்களிலும் துவார பாலகர் வண்ணச் சுதையில்
உள்ளனர். மேற்புறத்தில் இராமர் பூசித்த சிற்பம் உள்ளது. மூலவர் தரிசனம் -
சுயம்புத் திருமேனி, திருமேனியின் முடி மீது பசுவின் குளம்பு பதிந்த வடுவும்
; பாற்சொரிந்த அடையாளக் கோடும் உள்ளன.

     ஆமாத்தூர்ச் செல்வனை ஆமளவும் வழிபட ஆத்மசாந்தி
கிடைக்கின்றது. கோஷ்டமூர்த்தங்களாக (1) சர்ப்பக்கோவணத்துடன் அழகான
பிட்சாடனமூர்த்தி (2) தட்சிணாமூர்த்தி (3) இலிங்கோற்பவர் (எதிரில்
சஹஸ்ரலிங்கம் உள்ளது) (4) பிரம்மா (எதிரில் சிவதுர்க்கைசிலை உள்ளது) (5)
துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது.

     அம்பாள் கோயில் எதிரில் உள்ளது. மேற்கு நோக்கியது. பிராகாரத்தில்
சந்நிதி ஏதுமில்லை. கொடிமரம் பலிபீடம் சிம்மம் உள. உள் வாயிலின்
வண்ணச் சுதையில் துவாரபாலகியர் உருவங்கள் உள்ளன. அம்பாள் -
முக்தாம்பிகை அற்புதமான அழகு. வரப்பிரசாதி அம்மன். அம்பாள்
சந்நிதிக்கு நுழையும்போதே வலப்பால் மூலையில் வட்டப்பாறை அம்மன்
சந்நிதி (அம்பாளின் சாந்நித்யரூபம்) உள்ளது. தற்போது இச் சந்நிதியில்
சிவலிங்கமே உள்ளது.

     வட்டபாறை அம்மன் சந்நிதி இங்குப் பிரசித்தமானது. இங்கு அம்பாள்
சந்நிதியில் இருந்து பொய் சத்தியம் செய்தால் அவர்களைப் பாம்பு
தீண்டிவிடும் என்பது அசையாத நம்பிக்கையாக இருந்து வருகிறது. இது
தொடர்பாகச் சொல்லப்படும் வரலாறு வருமாறு:-

    
“அண்ணன் ஒருவன் இளையவனான தன் தம்பியை ஏமாற்றிச்
சொத்தினைத் தனக்குச் சேர்த்துக் கொண்டான். வயது வந்து உண்மையறிந்த
தம்பி அண்ணனைச் சென்று தனக்குரிய சொத்தைத் தருமாறு கேட்டான் -
மறுக்கவே பஞ்சாயத்தைக் கூட்டினான். அண்ணன் மறுக்கவே அவர்களும்
வட்டப்பாறை அம்பாள் சந்நிதியில் சத்தியம் செய்து தருமாறு கூறினர்.
அண்ணன் இதற்கென ஒரு சூழ்ச்சி செய்தான். தம்பியின் சொத்தால் பெற்ற
மதிப்பைத் திரட்டிப் பொன்வாங்கி அதைத்