என்று வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாதீனத்தின் குருமகா சந்திதானமாக இன்று எழுந்தருளியிருப்பவரே தவத்திரு. ‘பொன்னம்பல அடிகளார்’ ஆவார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் இத்தலத்தில் படியெடுக்கப் பட்டுள்ளன. இவை தமிழ், சமஸ்கிருதம், கன்னடமொழிகளில் உள்ளன. (கல்வெட்டுகளின் விவரத்தை ஆலயத்தலவரலாற்று நூலில் விரிவாகக் காணலாம்.) திருக்கோயில் சார்பில் தங்கும் விடுதிகள் உள்ளன. இத்திருக்கோயிலின் சிறப்பைப் பற்றிப் பாடியோரும் நூல்களும் : 1. நமசிவாய சுவாமிகள் - சார பிரபந்தம். 2. திருச்சிற்றம்பல நாவலர் - அண்ணாமலையார் சதகம். 3. (காஞ்சிபுரம்) பல்லாவரம் சோணாசல பாரதியார் - அண்ணாமலை கார்த்திகை தீப வெண்பா, சோணாசல வெண்பா, திருவருணைக் கலிவெண்பா, சோணாசல சதகம். 4. வடலூர் இராமலிங்க சுவாமிகள் - திருவண்ணாமலை திருவருட் பதிகம். 5. புரசை அஷ்டாவதனம் சபாபதி முதலியார் - அருணாசலேஸ்வரர் பதிகம். 6. காஞ்சிபுரம் சபாபதி முதலியார் - அருணாசல பதிகம். 7. யாழப்பாணம், நல்லூர் தியாகராஜப்பிள்ளை - அண்ணாமலையார் வண்ணம். இவையன்றி ; உண்ணாமுலையம்மன் பதிகம், உண்ணாமுலையம்மன் சதகம், அருணாசலேஸ்வரர் அக்ஷரமாலை, அண்ணாமலை பஞ்சரத்னம், அருணாசல நவமணி மாலை, அருணாசல அஷ்டகம், அருணைக் கலம்பகம், திருவருணை வெண்பா முதலிய நூல்களும் உள்ளன. வள்ளல் பச்சையப்பர் இக்கோயிலில் அர்த்த சாமக்கட்டளைக்கு ஒரு லட்சம் வராகன் வைத்துள்ள செய்தியைத் தெரிவிக்கும் கல்வெட்டொன்று கோயிலில் உள்ளது. “உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும் அண்ணாமலை தொழுவார் வினைவழுவா வண்ணம் அறுமே.” (சம்பந்தர்) |