95/41. சேய்ஞலூர். சேங்கனூர் | சோழநாட்டு (வடகரை)த் தலம். மக்கள் ‘சேங்கனூர்’ என்று வழங்குகின்றனர். கும்பகோணம் - திருப்பனந்தாள் சாலையில், நெடுங்கொல்லை கிராமம் தாண்டி, சேங்கனூர் கூட்டுரோடு உள்ளது. கூட்ரோடில் “ஸ்ரீ சண்டேசுவர நாயனார், பெரியவாச்சான்பிள்ளை அவதாரத் தலத்திற்குச் செல்லும் வாயில்” என்ற பெயர்வளைவு உள்ளது. அவ்விடத்தில் வலப்புறமாகப் பிரிந்து செல்லும் (சேங்கனூர் சாலையில்) பாதையில் |