பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 363


அ/மி.தாயுமானவர் உழவாரப் பணி மன்றத்தின் சார்பில் செய்யப்பட்டு
வருகின்றன. உற்சவ மூர்த்தங்கள் பாதுகாப்பு கருதி சுவாமி மலையில்
வைக்கப்பட்டுள்ளன. நாடொறும் நான்கு காலவழிபாடுகள், கார்த்திகைச்
சோமவாரங்கள், நவராத்திரி, மார்கழியில் மாணிக்கவாசகர் உற்சவம்
இத்தலத்தில் விசேஷமானவை. இவ்வூரின் பக்கத்தில் கொட்டையூர்
உள்ளது.

    
 “எண்டிசைக்கும் புகழ் இன்னம்பர் மேவிய
       வண்டிசைக் குஞ்சடையீரே
 
     வண்டிசைக் குஞ்சடையீர் உமை வாழ்த்துவார்
       தொண்டிசைக் குந் தொழிலோரே”       (சம்பந்தர்)

(இப்பதிகம் “திருமுக்கால்” என்னும் யாப்பமைதியுடையது).

   
  “தொழுது தூமலர் தூவித்துதித்து நின்(று)
       அழுது காமுற்று அரற்று கின்றாரையும்
       பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
       எழுதுங் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே.”  (அப்பர்)

     (இத்தலத்தில் சுந்தரர் ‘அங்கம் ஓதியோர் ஆறைமேற்றளி நின்றும்
போந்து வந்து இன்னம்பர்’ என்று தொடங்கி ‘புறம்பயந்தொழப் போதுமே’
என்று முடியும் இன்னிசைப் பதிகம் பாடிக் கொண்டே திருப்புறம்பியத்தை
அணுகினார்.)

                                          
   -இட்டமுடன்
     என்னம்பர் என்னம்பர் என்று அயன்மால் வாதுகொள
     இன்னம்பர் மேவுகின்ற என்உறவே           (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

    அ/மி. எழுத்தறிநாதேஸ்வரர் திருக்கோயில்
     இன்னம்புர் - அஞ்சல்
    
(வழி) திருப்புறம்பியம் - கும்பகோணம் வட்டம்
     
தஞ்சை மாவட்டம் - 612 303.