பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 43


     விஷ்ணு, பிரம்மா, துர்க்கை முதலிய திருமேனிகளைத் தரிசித்தவாறே
வலம் வரலாம்.

     இடப்பால் வரிசையாக அறுபத்துமூவர் திருமேனிகள் விநாயகர் சந்நிதி,
சுப்பிரமணியர் சந்நிதிகள். தலமரம் - எலுமிச்சை, தழைத்து உள்ளது.

    ஆலய விமானம் ‘கஜப்பிரஷ்ட’ அமைப்புடையது. நடராசர் சந்நிதியைத்
தரிசித்து எதிர்ப்புறம் திரும்பினால் நவக்கிரக சந்நிதி,  யானைமீது  முருகன்
அமர்ந்திருக்கும் அபூர்வ திருமேனி அழகுறக் காட்சிதருகின்றது. பள்ளியறை
கடந்து, பைரவரை வணங்கி, அம்பாளை வலமாக வந்து படியேறிச் சென்றால்
மூலவரைத் தரிசிக்கலாம். சதுர பீடம், உடும்பு வால் போன்ற அமைப்பில் -
சிறுத்த வடிவில் சிவலிங்கம்.

     உற்சவத் திருமேனிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. அம்பாள் சந்நிதி -
நின்ற திருக்கோலம். திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்துக் கட்டளை ‘சிவசிவ
ஒலிமண்டபம்’ உள்ளது. திருமுறைப் பாராயணக் கட்டளை நித்தம் காலை
மாலை நடைபெறுகிறது. கோயில் உள்ளேயும், இக்கோயிற்பதிகம் சலவைக்
கல்லில் திருப்பனந்தாள் ஸ்ரீ காசி  மடத்தினரால்  பொறித்துப்  பதிக்கப்
பட்டுள்ளது. வெளிப் பிரகாரத்தில் திருமண மண்டபம், வாகன மண்டபம்,
யாகசாலை முதலியவைகள் உள்ளன.

     ஆண்டுதோறும் மாசி மகத்தில் 10 நாள்களுக்குப் பெருவிழா சிறப்பாக
நடைபெறுகின்றது. இதன்  பரம்பரை  அறங்காவலராக  இருந்து   வருபவர்
வேலூர் பாங்கர், திரு. M.D. நடராச முதலியார் அவர்கள். சேலம் சுப்பராயப்
பிள்ளை என்பவர் தம் உடலில் இடுப்பின்கீழ் செயலற்றுப் போக எல்லாவித
மருத்துவமும் செய்தும் பயனின்றிப்  போக,  திருமுறையில்  கயிறுசார்த்திப்
பார்த்து, இத்தலப்பதிகம் வர, இங்கு வந்து  தங்கி,  நாடொறும் இறைவனை
வழிபட்டுத் தலப்பதிகத்தைப்  பாராயணம்  செய்து  சிலகாலம்    வாழ்ந்து
இப்பெருமானருளால் உடல் பூரணகுணம் பெற்றுத் திரும்பினார். இந்நிகழ்ச்சி
அண்மைக்   காலத்தில்   நடைபெற்றதாகும்.  இப்பகுதியில்  உள்ள  சமய
அன்பர்கள் அனைவரும் இதை அறிவர்.

     1971ல் கும்பாபிஷேகம் நடத்தப் பெற்றுள்ளது. கல்வெட்டில் இத்தலம்
சயங்கொண்ட சோழமண்டலத்துப் பொற்கோட்டத்து மாகறல் நாட்டு மாகறல்
என்று   குறிக்கப்படுகிறது.   குலோத்துங்க   சோழன்,   சுந்தரபாண்டியன்,
விசயகண்ட கோபாலதேவர் காலத்திய