பக்கம் எண் :

440 திருமுறைத்தலங்கள்


புறப்பட்டுச் செல்லும். சுவாமி இங்கு வந்து இறங்கி, (ஐந்தாவது தலமாக)
சற்று இளைப்பாறிச் செல்லும். சிலாத முனிவருக்கும், சாதாதாப முனிவர்
தமையனாராதலின், இளைப்பாறிச் செல்லும்போது மூத்தமாமனார் என்ற
வகையில் கட்டிச் சோறு கட்டித் தரும் ஐதீகமாக அன்று (தயிர்சாதம்,
புளியோதரை) - கட்டித் தந்து சுவாமியுடன் அனுப்புவது மரபாக இருந்து
வருகின்றது.

     அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம்.
அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்கள். பெயருக்கேற்ற மங்களப்
பொலிவு. வலப்பால் விநாயகர், உள்வாயில் கடந்ததும் இடப்பால் வள்ளி
தெய்வயானையுடன் கூடிய சுப்பிரமணியர் தரிசனம். அடுத்து மகாலட்சுமி
சந்நிதி. எதிரில் நடராசசபை உள்ளது. வலமாக வரும்போது விஷ்ணுதுர்க்கை
சந்நிதி உள்ளது. பைரவரும், பலவகை விநாயகர்களும், (வெவ்வேறு வகை
மூர்த்தங்கள்) சூரியனும் அமர்ந்த கோலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரரும்
அடுத்தடுத்துக் காட்சி தருகின்றனர்.

     சண்டேஸ்வரர் சந்நிதி தனிக் கோயிலாகவுள்ளது. கோஷ்ட
மூர்த்தங்களாக பிரமன், லிங்கோற்பவர், தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர்
மூர்த்தங்கள் உள.

    உள்வலம் முடித்து, துவாரபாலகர்களை வணங்கி உட்சென்றால்
இடப்பால் நவக்கிரகங்கள் உள்ளன. துவாரபாலகர்களுக்குப் பக்கத்தில்
சாதாதாப முனிவர் உருவம் உள்ளது. சப்தஸ்தானலிங்கங்கள், பஞ்ச
பூதலிங்கங்கள், சாதாதாபருக்குக் காட்சி தந்த காளத்தி நாதர் சந்நிதி
முதலியவைகள் உள்ளன. நவக்கிரகங்களில் சூரியன் இரு மனைவியருடன்
காட்சி தருகின்றார். மூலவர் தரிசனம். மூலவர் சுயம்பு. துவாரகணபதியும்
சுப்பிரமணியரும் உள்ளனர். மூலவர் பாணம் சற்று உயரமாகவுள்ளது. சுவாமி
சந்நிதிக்குப் பக்கத்தில் பிரமன், சரஸ்வதி சிலாரூபம் உள்ளன. பிரமனின்
நான்கு முகங்களும் அழகாகவுள்ளன. பூ, ஜபமாலை ஏந்தி, இருகைகளும்
பிரார்த்திக்கும் அமைப்பில், அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள இவ்வுருவம்
(பிரமன்) அழகுடையது. பிரமன் சிரம்கொய்த பின், அவன் வேண்டிட
ஐம்முகங்களின் அழகினை சதுர்முகங்களில் (நான்கு முகங்களில்) இறைவன்
அருளிச் செய்ய, பிரமன் பெற்றுப் பயனடைந்ததாக வரலாறு.

     பிரமன் சிரம் கொய்வதற்காக இறைவன் மேற்கொண்ட வடுகக் கோலம்.
சுவாமி சந்நிதிக்கு எதிரில், இடப்பால், பிரமன் சந்நிதிக்குச் செல்லும் வாயிலில்
சுவரையொட்டிக் கதவோரமாகச் சிறிய சிலா ரூபமாகவுள்ளது. நவக்கிரக
சந்நிதியில் தீபமேற்றி வழிபடுவதற்காகத்