பக்கம் எண் :

482 திருமுறைத்தலங்கள்


144/27. குடந்தைக் கீழ்க்கோட்டம்

(நாகேசுவர சுவாமி திருக்கோயில்)

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     கும்பகோணத்தின் (குடந்தையின்) கீழ்த்திசையில் அமைந்துள்ள
கோயில். அமுதகலசத்தின் (குடத்தின்) வில்வம் சிவலிங்கமான தலம். நாட்டின்
எல்லாப் பகுதிகளிலிருந்தும் கும்பகோணத்திற்குப் பேருந்து வசதிகள்
நிரம்பவுள்ளன. திருக்கோயில், பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே
உள்ளது. நாகராசன் சூரியன் ஆகியோர் வழிபட்ட தலம். இங்குள்ள
காவிரித்துறைக்கு, ‘பகவத் படித்துறை’ என்று பெயர் சொல்லப்படுகிறது.
‘கோயிற் பெருத்தது கும்பகோணம்’ என்னும் மொழிக்கேற்ப இத்தலத்தில்
ஏராளமான கோயில்கள் உள்ளன.

     இறைவன் - நாகேஸ்வரர், நாகநாதர்.
     இறைவி - பிருகந்நாயகி, பெரிய நாயகி.

     பெரிய கோயில். அப்பர் பாடல் பெற்ற தலம்.

     ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. உள்ளே
இடப்பால் நந்தவனம். சிங்கமுக தீர்த்தக்கிணறு உள்ளது. படிகள் இறங்கிச்
செல்லவேண்டும். இறங்கு வாயிலில் கல்லில் இரு சிங்கங்கள் சுதையில்
உள்ளன. வலப்பால் பிருகந்நாயகி சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. உள்ளே
சென்றால் இடப்பால் பதினாறுகால் மண்டபமும் வலப்பால் நடராசசபையும்
உள்ளன. இங்குள்ள நடராச மண்டபம், பேரம்பலம் என்றழைக்கப்படுகிறது.
ரத அமைப்பில் உள்ளது. இருபுறங்களிலும் உள்ள கல் (தேர்ச்) சக்கரம்
கண்டு மகிழத்தக்கது. இச்சக்கரங்களின் ஆரங்களாக 12 ராசிகளும் இடம்
பெற, 2 குதிரைகளும் நான்கு யானைகளும் இழுக்கும் நிலையில் இத்தேர்
மண்டபம் அமைந்துள்ளது அழகாகவுள்ளது. பெயரே ஆனந்தத் தாண்டவ
நடராசசபை
அல்லவா? நடனத்திற்குச் சிவகாமி தாளம் போடும் பாவனையும்
மகாவிஷ்ணு குழலூதும் காட்சியும் பேரழகுடையன. சுவரில் ஒருபுறம்
சரபமூர்த்தி, மறுபுறம் சிவலிங்கம், நந்தி, விநாயகர், அம்பாள், முருகன்,
நால்வர் உருவங்கள் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன. கொடிமரம்
வணங்கியுட் சென்று வாகன மண்டபம் கடந்து வலம் வரும்போது ‘படை
வெட்டி மாரியம்மன் சந்நிதி’ உள்ளது. பிரளயகாலருத்ரர் சந்நிதி, வலஞ்சுழி
விநாயகர், ஐயனார், சப்தமாதாக்கள், சுப்பிரமணியர், சப்தலிங்கங்கள் முதலிய
சந்நிதிகள் உள்ளன. வில்வ மரத்தடியில் அமர்ந்த நிலையில் உள்ள