பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 523


மணிவாசக மன்றத்தை நெறிப்படுத்தி, அனைவரும் போற்றத்தக்க வகையில்
நடத்திச் செல்கின்றார்.

     “மருவார் குழலி மாதொர் பாகமாய்த்
     திருவார் செம்பொன் பள்ளி மேவிய
     கருவார் கண்டத் தீசன் கழல்களை
     மருவா தவர்மேல் மன்னும் பாவமே.”     (சம்பந்தர்)

     “தந்தையும் தாயுமாகித் தானவன் ஞானமூர்த்தி
     முந்திய தேவர்கூடி முறைமுறை இருக்குச் சொல்லி
     எந்தை நீ சரணம் என்றங்(கு) இமையவர் பரவிஏத்தச்
     சிந்தையுள் சிவமதானார் திருச் செம்பொன் பள்ளியாரே.”
                                               (அப்பர்)
        
        
     க்ஷேத்திரக்கோவை பிள்ளைத்தமிழ்

     தேசுமிகு தேவர்களில் ஒருவன் நீ இந்த்ராதி
          தேவரெல்லாம் கூடியே
     சிவபரப் பிரமம் இவனே என்று பூசித்த
          செம் பொற் பதாம் புயத்தோன்
     வாச மலைரோனைமுன் குட்டியே சிறைவைத்து
          மண்டு மண்டம் படைத்தோன்
     மாலும் அயனும் தேடி அடிமுடிகள் காணாத
          வளர் பரஞ் சோதி மைந்தன்
     தாசரடியார் தாசன் என இருந்திடு முனைத்
          தன் பெருமை யறியாமலே
     தனை ஒத்த பேரெனப் பிள்ளை விளையாட்டினைத்
          தருமிளம் பருவத்தினால்
     ஆசையோடழைத் தனன் எங்கள் குமரேசனுடன்
          அம்புலீ ஆடவாவே
     அழகு செம்பொன் பள்ளி ஆறானனத்துடன்
          அம்புலீ ஆடவாவே.           (சிதம்பர முனிவர்)

                                     - நெறிகொண்டே
     “அன்பள்ளி யோங்கும் அறிவுடையோர் வாழ்த்துஞ் செம்
     பொன்பள்ளி வாழ் ஞான போதமே.”           (அருட்பா)