விநாயகர், பாலசுப்பிரமணியர், கஜலட்சுமி சந்நிதிகளும் தலமரம் வன்னியும் உள்ளன. முன்மண்டபத்தில் நால்வர் சந்நிதி. வலப்பால் அம்பாள் தரிசனம், சிறிய திருமேனி. நேரே மூலவர். துவார பாலகர்கள் கல்சிற்பங்களாகவே வடிக்கப்பட்டுள்ளனர். மூலவர் மிக்க பிரகாசத்துடன் காட்சியளிக்கின்றார். இங்குள்ள சோமாஸ்கந்தர், நடராசர் திருமேனிகள் மிக்க அழகுடையவை. மாசிமகம் விசேஷம். “ஞானம் காட்டுவர் நன்னெறி காட்டுவர் தானம் காட்டுவர் தன்னடைந்தார்க் கெலாம் தானம் காட்டித் தன் தாளடைந்தார் கட்கு வானம் காட்டுவர் போல் வன்னியூரரே.” (அப்பர்) - ஊழிதொறும் மன்னியூர் மால்விடையாய் வானவா என்று தொழ வன்னியூர் வாழு மணிகண்டா. (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. அக்கினீஸ்வரர் திருக்கோயில் அன்னியூர் & அஞ்சல் (வழி) கோனேரி ராஜபுரம் - குடவாசல் வட்டம் தஞ்சை மாவட்டம் - 612 201 கும்பகோணம் RMS. 180/63. கருவிலிக்கொட்டிட்டை கருவேலி | சோழநாட்டு (தென்கரை)த் தலம். மக்கள் கருவேலி என்று வழங்குகின்றனர். பூந்தோட்டத்திலிருந்து நாச்சியார் கோயில் செல்லும் பேருந்துச் சாலையில் கூந்தலூரையடைந்து அரிசிலாற்றுப் பாலத்தைக் கடந்து சென்றால் தலத்தை யடையலாம். கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் பூந்தோட்டம் செல்லும் சாலையில் உள்ளது. கூந்தலூரில் பேருந்து |