பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 597


     வள்ளி கல்யாண உற்சவம் இத்தலத்தில் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.
கோயிலின் வெளிமதிற்சுவர் கிலமாகிவுள்ளது. சில விடங்களில் சரிந்துமுள்ளது.
உற்சவமூர்த்தங்கள் பாதுகாப்பாக வேறு கோயிலில் வைக்கப்பட்டுள்ளன.
15.9.1996ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.

   
“கருவரை போலரக்கன் கயிலைம் மலைக் கீழ்க்கதற
   ஒருவிரலால் அடர்த்தி இன்னருள் செய்த உமாபதிதான்
   திரைபொரு பொன்னி நன்னீர்த் துறைவன் திகழ் செம்பியர் கோன்
   நரபதி நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.”  (சுந்தரர்)

                                  - “ஆஞ்சியிலா(து)
   இந்நிலத்தும் வானாதி எந்நிலத்தும் ஓங்குபெரு
   நன்னிலத்து வாழ் ஞானநாடகனே.”           (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

 
    அ/மி. மதுவனேஸ்வரர் திருக்கோயில்
     நன்னிலம் & அஞ்சல்
     நன்னிலம் வட்டம் - திருவாரூர் மாவட்டம் - 610 105.

189/72. கொண்டீச்சரம்

திருக்கண்டீஸ்வரம்

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     மக்கள் திருக்கண்டீஸ்வரம் என்று வழங்குகின்றனர். நாகப்பட்டினம் -
நன்னிலம் ; மயிலாடுதுறை - திருத்துறைப்பூண்டி - வழி நன்னிலம் ;
நாகப்பட்டினம் - கும்பகோணம் - (வழி) நன்னிலம் முதலிய பாதைகளில்
வருவோர் ; நன்னிலத்துக்குள் நுழைவதற்கு முன்னால் “தூத்துகுடி Stopping”
என்னுமிடத்தில் பிரியும் பாதையில் உள்ளே சென்றால் வெகு
அருகாமையிலுள்ள கோயிலையடையலாம். காமதேனு வழிபட்ட தலம்.
வில்வாரண்யம் எனப்படுவது. உமை, பசுவின் வடிவில், தன்கொம்பால்
பூமியைக் கிளறியவாறே இறைவனைத் தேடிவந்தபோது, கொம்புபட்டுக் குருதி
பெருகி இறைவன் வெளிப்பட்டார். உமை (பசு) தன்பாலையே பெருமான்மீது
(சிவலிங்க மூர்த்தம்) சொரிந்து புண்ணை ஆற்றினாள் என்பது தலவரலாறு.
மூலத்திருமேனியின் மீது வெட்டுப்பட்டது போன்ற - பசுவின் கொம்பு பதிந்த
ஆழமான வடு உள்ளது.