பக்கம் எண் :

638 திருமுறைத்தலங்கள்


தலங்களுள் ஒன்று. மற்றையவை (1) நாகைக்காரோணம் (2) திருநள்ளாறு
(3) திருமறைக்காடு (4) திருக்காறாயில் (5) திருவாய்மூர் (6) திருக்கோளிலி
என்பன.

     “சீரார் திருவாரூர் தென்நாகை நள்ளாறு
     காரார் மறைக்காடு காறாயில் - பேரான
     ஒத்த திருவாய்மூர் உவந்த திருக்கோளிலி
     சத்த விடங்கத் தலம்” - என்பது பழம் பாடல்.

     திருவாரூர்க் கோயிலுக்குள் சென்றுவிட்டால் ஏராளமான சந்நிதிகள்
இருப்பதால், குவித்த கரங்களை - விரிப்பதற்கு வழியேயில்லையெனலாம்.
இதையே மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் “குவித்தகரம்
விரித்தல் செலாக் கோயில்களும் பல உளவால்” என்று தம் வாக்கால்
புகழ்ந்து பாடுகின்றார்.

     இறைவன் - வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார்.
     இறைவி - கமலாம்பிகை, அல்லியங்கோதை, நீலோத் பலாம்பாள்.
     தலமரம் - பாதிரி.
     தீர்த்தம் - 1) கமலாலயம் (5 வேலிப் பரப்புடையது, தேவ தீர்த்தம்
எனப்படுகிறது).

     (கோயில் ஐந்துவேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பது
இங்கு வழங்கும் பழமொழி) கமலாலயம் 64 கட்டங்களையுடையது.
மாற்றுரைத்த விநாயகர் சந்நிதி மேலைக்கோபுரத்தின் எதிரில் குளக்கரையில்
உள்ளது.)

     2) சங்கு தீர்த்தம் - ஆயிரக்கால் மண்டபத்தின் அருகிலுள்ளது.
அமுததீர்த்தம் என்றும் பெயர்.
     3) கயாதீர்த்தம் - ஊருக்கு அப்பால் கேக்கரை என்று வழங்கும் இடத்தில் உள்ளது.
     4) வாணிதீர்த்தம் - (சரஸ்வதி தீர்த்தம்) மேற்குப் பெரிய பிராகாரத்தில்
சித்திரசபை மண்டபத்திற்கு எதிரில் உள்ளது.

     இது தவிர ‘செங்கழுநீர் ஓடை’ எனப்படும் ஓரோடை கோயிலுக்கு
அப்பால் 1 கி.மீ. தொலைவில் உள்ளது.

     மூவர் பாடல் பெற்றது.

     கோயில் நாற்புறமும் உயர்ந்த மதில்களுடன் - கோபுரங்களுடன்
விளங்குகிறது. கீழ்க்கோபுரம் 118 அடி உயரமுள்ளது. மொத்தம் வீதிப்