பக்கம் எண் :

682 திருமுறைத்தலங்கள்


     இறைவன் - பாரிஜாதவனேஸ்வரர், களர்முளைநாதர்.
     இறைவி - அமுதவல்லி, இளங்கொம்பன்னாள், அழகேஸ்வரி
     தீர்த்தம் - துர்வாச தீர்த்தம் முதலியன
     தலமரம் - பாரிஜாதம் (பவழமல்லி).

     சம்பந்தர் பாடல் பெற்றது.

     களரி என்பதற்குக் கூட்டம், சபை, அரங்கம் எனப் பல பொருள்கள்.
துர்வாசருக்குச் சிவபெருமான் பிரமதாண்டவ தரிசனம் தந்தருளியமையால்
‘களரி’ என்னும் இத்தலப்பெயர் பின்பு ‘களர்’ என்றாயிற்று. துர்வாசருக்கு
நடராஜர் நடனக் காட்சிதந்த வடிவமும் அதன் எதிரில் துர்வாசரின் வடிவமும்
(கைகூப்பிய நிலையில்) உள்ளது.

     வலம்புரி விநாயகர் சந்நிதியும் காணச்சிறப்பானது.

     கோவிலூர் மடாலயத்தில் அதிபராக இருந்த வீரசேகர ஞானதேசிக
சுவாமிகளின் சமாதிக் கோயில் ஆலயத்திற்குப் பக்கத்தில் உள்ளது.
அவருக்குத் திருக்களர் ஆண்டவர் என்று பெயர். நன்கு பராமரிக்கப்படும்
இக்கோயிலில் - மடாலயத்தில் சாதுக்கள் இருந்து வருகின்றனர். கோவிலின்
பக்கத்தில் வேதபாடசாலையும், பசுமடமும், வேதாந்த மடமும், அறுபத்துமூவர்
குருபூஜை மடமும் உள்ளன. இத்தலத்தில் பிடாரி கோயிலும், ஐயனார்
கோயிலும், மாரியம்மன் கோயிலும் உள்ளன. இத்திருக்கோயில் கிழக்கு
நோக்கியுள்ளது. கோயிலுக்குள் மூன்று பிராகாரங்கள் உள்ளன. முன்னே
இருப்பது துர்வாச தீர்த்தம்.

     ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. உள்நுழைந்தால் நந்தியும்
கொடிமரமும் உள்ளன. ஆலயத்தின் தென்மேற்கு முனையில் விநாயகர்
கோயிலும், வடக்கில் வசந்த மண்டபமும் யாகசாலையும் உள்ளன.
இதையடுத்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் ஒரே வரிசையில் இரண்டு கோபுர
வாயில்கள் உள்ளன. உள்ளே ஆண்டவர் உருவமும் நவக்கிரகங்களும் உள.

     உள்வாயிலைக் கடந்து சென்றால் சந்திரன், பிரம்மா, விஸ்வகர்மா
வழிபட்ட சந்நிதிகளும் உள்ளன. நால்வர் சந்நிதி உளது.
மோக்ஷத்துவாரேஸ்வரர், சோமாஸ்கந்தர், தல (வலம்புரி) விநாயகர், வள்ளி
தெய்வயானை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி சந்நிதிகள் தரிசிக்கத்தக்கன.
நடராஜர் சந்நிதி (பிரம தாண்டவமூர்த்தி) இத்தலத்தில் விசேஷமானது.

     கிழக்கில் பெருமாள் சந்நிதியும் சூரிய சந்நிதியும் உள்ளன. மூலவர் -
பாரிஜாதவனேஸ்வரர். சிவலிங்கத் திருமேனி. இருபுறமும் துவார பாலகர்கள்,
நந்தி பலிபீடமும் உள்ளன. அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியது தனியே
உள்ளது. இருபுறமும் துவார சக்திகள். வெளிமண்டபத்தின்