பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 693


     அரிவாட்டாய நாயனார் முக்தி பெற்ற தலம். இந்நாயனார் பிறந்த
ஊராகிய ‘கணமங்கலம்’ பக்கத்தில் உள்ளது. மக்கள் அதை ‘கணமங்கலத்
திடல்’ என்றும், ‘கண்ணந்தங்குடி’ என்றும் வழங்குகின்றனர். இங்குள்ள
பழைமையான சிவன் கோயில் அழிந்துவிட்டது. இதுவே கோச்செங்கட்
சோழன் கட்டிய மாடக்கோயில். இக்கோயில் அழிந்து விடவே, பிற்காலத்தில்
தேவகோட்டை ராம.அருஅரு. இராமநாதன் செட்டியார் அவர்கள்
இப்போதுள்ள கற்கோயிலைக் கட்டித் தந்துள்ளார்கள். (கோயில்-நீள் நெறி -
ஊர்-தண்டலை) கோயில் கற்றளி. விமானங்கள் சுதை வேலைப்பாடுடையவை.

     இறைவன் - ஸ்திரபுத்தீஸ்வரர், நீள்நெறி நாதர்.
     இறைவி - ஞானாம்பிகை
     தலமரம் - குருந்தை
     தீர்த்தம் - ஓமக தீர்த்தம், கோயிலின் பக்கத்தில் சாலையின் கீழ்ப்பால்
உள்ளது. ஞானசித்தி விநாயகர் கோயிலின் எதிரில் நீராடல் சிறப்புடையது.

     சம்பந்தர் பாடியது.

     முகப்பு வாயில் உள் நுழையும்போது இடப்பால் அதிகார நந்தி சந்நிதி
உள்ளது. கொடி மரமில்லை. பலிபீடம், நந்தி உள்ளன. கொடி மரத்து
விநாயகர் உள்ளார். பிராகாரத்தில் விநாயகர் சந்நிதியும், கருவறையின்
பின்புறத்திற்கு நேர் எதிரில் சிவலிங்க சந்நிதியும்,