பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 713


     காலத்திய கல்வெட்டு கோயிலில் விளக்கெரிக்க நிபந்தமாக நிலம்
விடப்பட்டதைக் கூறுகிறது.

     நாடொறும் ஆறுகால பூசைகள் நடைபெறுகின்றன. சித்திரையில்
பெருவிழா பத்து நாள்களுக்கு நடைபெறுகின்றது. தவிர, ஆவணி முதல்
வெள்ளிக்கிழமையில் அம்பாள் கல்யாண உற்சவம், நவராத்திரி, சஷ்டி,
கார்த்திகைச் சோமவாரங்களில் சங்காபிஷேகம், கார்த்திகை தீபம், தைப்பூசம்,
தைமாதம் கடைசி வெள்ளிக்கிழமைகளில் திருவிளக்கு வழிபாடு முதலிய
உற்சவ விசேஷங்களும் நடைபெறுகின்றன. தலபுராணம் உள்ளது.

    
 “மறைத்தான் பிணிமாதொரு பாகந்தன்னை
      மிறைத்தான் வரையால் அரக்கன் மிகையைக்
      குறைத்தான் சடைமேற் குளிர்கோல் வளையை
      நிறைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.”   (சம்பந்தர்)

     “நெல்லிவனம் மேவும் நித்தன் திருவடியைப்
     புல்லும் மனத்துடனே போற்றினால் - தொல்லை
     வினைத்தொகுதியாவும் விரைந்திடும் கண்டீர்
     எனைத்தும் துயரமினி ஏன்.” (தனிப்பாடல்)

                                    - “ஓங்குமலை
     வல்லிக்கா தாரமணிப்புய என்று அன்பர்தொழ
     நெல்லிக்கா வாழ் மெய்ந்நியமமே.”           (அருட்பா)

                                 - “தருத்தாங்கு
     நெல்லிக்கா மேவு நிகழ் மங்கள மாது
     புல்லுகின்ற நெல்லிவனப் புண்ணியா” (சிவநாயக்கலிவெண்பா)


     (திருக் கோயில் மண்டபங்களின் நீதிமொழிகள் எழுதப்பட்டுள்ளன.)

அஞ்சல் முகவரி:-

     
அ/மி. நெல்லிவனேஸ்வரர் திருக்கோயில்
     திருநெல்லிக்காவல் - அஞ்சல் - 610 205.
     திருவாரூர் வட்டம் - மாவட்டம்.