பக்கம் எண் :

736 திருமுறைத்தலங்கள்


    விண்ணினார் விண்ணின்மிக்கார் வேதங்கள் விரும்பியோதப்
    பண்ணினார் கின்னரங்கள் பத்தர்கள் பாடியாடக்
    கண்ணினார் கண்ணினுள்ளே சோதியாய் நின்ற எந்தை
    மண்ணினார் வலங்கொண் டேத்துமாமறைக் காடனாரே."  (அப்பர்)

   “யாழைப் பழித்தன்ன மொழி மங்கையொரு பங்கன்
    பேழைச் சடைமுடிமேல் பிறை வைத்தானிடம் பேணில்
    தாழைப் பொழிலூடே சென்று பூழைத்தலை நுழைந்து
    வாழைக் கனி கூழைக் குரங்குண்ணும் மறைக்காடே."     (சுந்தரர்)

                     
பதினோராந் திருமுறை

     ஊரெலாம் துஞ்சி உலகெலாம் நள்ளென்று
     பாரெலாம் பாடவிந்த பாயிருட்கண் - சீருலாம்
     மாந்துறைவாய் ஈசன் மணிநீர் மறைக்காட்டுப்
     பூந்துறைவாய் மேய்ந்துறங்கா புள்.

     துயரும் தொழும் அழும் துகிலும் கலையும் செல்லப்
     பெயரும் பிதற்றும் நகும்வெய் துயிர்க்கும் பெரும்பிணி கூர்ந்து
     அயரும் அமர்விரிக்கும்மூரி நிமிர்க்கும் அந் தோஇங்ஙனே
     மயரும் மறைக்காட்டு இறைக்காட்டகப்பட்டவாணுதலே.

     கொட்டும் சிலபல சூழநின் றார்க்கும் புற்றெழுந்து
     நட்ட மறியுங்கி ரீடிக்கும் பாடும் நகும்வெருட்டும்
     வட்டம் வரும் அருந் தாரணை செல்வம் மலர்தயங்கும்
     புட்டங் கிரும்பொழில் சூழ்மறைக் காட்டரன் பூதங்களே.
                              (பொன்வண்ணத்தந்தாதி)

                    வேதாரண்ய புராணம்
                 வேதாரண்யேஸ்வரர் துதி


     கார்தாங்கு வடிவநெடு மாலும் ஞாலங்
          கண்டவனும் அடிமுடிகள் காணாதோங்கிப்
     பேர்தாங்கு குணங்குறியொன் றின்றே யேனும்
          பிறங்குதொழில் ஐந்துதவும் பெருமைத் தாகிப்
     பார்தாங்கும் உலகமுதற் புவனம் யாவும்
          பரிப்பதற்கோர் முதலாகிப் படர்ந்தி டப்பால்
     வார்தாங்கு முலைக்கொடியும் படரும் வேத
          வனத்துறையும் தாணுவையாம் வணங்கல் செய்வாம்